இசை நிகழ்ச்சிக்கு சென்ற எஸ்.பி.பிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தனது பாடலை எஸ்பிபி பாடக்கூடாது என்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தெரிந்ததே.
இந்நிலையில் அமெரிக்காவில் தங்கியிருந்த எஸ்பிபி அவர்களின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பணம் ஆகியவை மர்ம நபர்களால் திருடு போனதாக அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தபோது இவை அனைத்தையும் எஸ்பிபி ஒரு பையில் வைத்திருந்ததாகவும், அந்த பை காணாமல் போய்விட்டதாகவும் தெரிகிறது. திருடு போன அந்த பையில் எஸ்.பி.பியின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு மட்டுமின்றி பாடல் குறிப்புகள் அடங்கிய ஐபேடும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தனது பாஸ்போர்ட் திருடு போனது குறித்து எஸ்பிபி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் செய்ததை அடுத்து அவர் நாடு திரும்ப வசதியாக மாற்று பாஸ்போர்ட் ஒன்றை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் திருடு போன எஸ்பிபியின் பையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அமெரிக்க போலீஸார் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments