இசை நிகழ்ச்சிக்கு சென்ற எஸ்.பி.பிக்கு நேர்ந்த அதிர்ச்சி சம்பவம்

  • IndiaGlitz, [Tuesday,April 04 2017]


பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் உள்ள பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இந்த நிகழ்ச்சிகளில் தனது பாடலை எஸ்பிபி பாடக்கூடாது என்று இளையராஜா நோட்டீஸ் அனுப்பிய விவகாரம் தெரிந்ததே.

இந்நிலையில் அமெரிக்காவில் தங்கியிருந்த எஸ்பிபி அவர்களின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு, பணம் ஆகியவை மர்ம நபர்களால் திருடு போனதாக அதிர்ச்சி தரும் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இசை நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்றிருந்தபோது இவை அனைத்தையும் எஸ்பிபி ஒரு பையில் வைத்திருந்ததாகவும், அந்த பை காணாமல் போய்விட்டதாகவும் தெரிகிறது. திருடு போன அந்த பையில் எஸ்.பி.பியின் பாஸ்போர்ட், கிரெடிட் கார்டு மட்டுமின்றி பாடல் குறிப்புகள் அடங்கிய ஐபேடும் இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தனது பாஸ்போர்ட் திருடு போனது குறித்து எஸ்பிபி அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தில் புகார் செய்ததை அடுத்து அவர் நாடு திரும்ப வசதியாக மாற்று பாஸ்போர்ட் ஒன்றை இந்திய தூதரகம் ஏற்பாடு செய்துள்ளது. மேலும் திருடு போன எஸ்பிபியின் பையை கண்டுபிடிக்கும் முயற்சியிலும் அமெரிக்க போலீஸார் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளிவந்துள்ளது.

More News

மைனா கணவரின் தற்கொலைக்கு யார் காரணம்? கடிதத்தில் பரபரப்பு தகவல்

பிரபல தொலைக்காட்சி நடிகை மைனா நந்தினியின் கணவர் கார்த்திகேயன் இன்று காலை தற்கொலை செய்து கொண்ட நிலையில் அவரது தற்கொலைக்கு காரணம் தெரியாமல் இருந்தது. ஆனால் சற்று முன்னர் தற்கொலைக்கு முன்னர் அவர் எழுதி வைத்த கடிதம் போலீசாரிடம் சிக்கியுள்ளது. இந்த கடிதத்தில் அவர் தற்கொலைக்கான காரணத்தை எழுதியுள்ளதாகவும் தெரிகிறது.

மணிரத்னம்-கார்த்தியின் 'காற்று வெளியிடை'. திரை முன்னோட்டம்

கோலிவுட் திரையுலகில் சீனியர் இயக்குனர்கள் பலர் தற்போதைய இளைஞர்களின் டிரண்டுக்கு மாற முடியாததால் திரையுலகில் இருந்து ஒதுங்கிவிட்ட நிலையில் இன்னும் ஃபீல்டில் இருக்கும் ஒரே பழம்பெரும் இயக்குனர் மணிரத்னம் அவர்கள் மட்டுமே.

வைகோவுக்கு துணையாக விரைவில் ப.சிதம்பரம் சிறை செல்வார். ஹெச்.ராஜா

தேசத்துரோகம் குறித்து சமீபகாலமாக சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து வருபவர் பாஜக தேசிய செய்தி தொடர்பாளர் ஹெச்.ராஜா என்பது அனைவரும் அறிந்ததே.

விஜய்க்கு ஏ.ஆர்.ரஹ்மான் கொடுத்த ஸ்பெஷல் டிரீட்

இளையதளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 61' படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு ராஜஸ்தானில் உள்ள பழமையான அரண்மனை உள்பட முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது

ஐபிஎல் மைதானத்தில் நடனமாடும் '2.0' நாயகி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் '2.0' படத்தின் நாயகியான எமிஜாக்சன் டிடிவி தினகரனின் தொப்பி சின்னத்திற்காக பிரச்சாரம் செய்வார் என்று கடந்த வாரம் ஒரு வதந்தி மிக வேகமாக சமூக வலைத்தளங்களில் பரவியது