எஸ்பிபி பாடிய கடைசி பாடல்: வீடியோவை வெளியிட்ட விஜய் பட இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் நேற்று பிற்பகல் மரணமடைந்த நிலையில் இன்று அவருடைய உடல் அவருடைய தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஒட்டுமொத்த திரையுலகமும் ரசிகர்களும் அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் பல திரையுலக பிரபலங்கள் எஸ்பிபி உடன் நிகழ்ந்த நிகழ்வுகளை பகிர்ந்து வருகின்றனர். அந்த வகையில் விஜய் நடித்த ’சச்சின்’ உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஜான் மகேந்திரன் தனது டுவிட்டர் பக்கத்தில் எஸ்பிபி பாடிய கடைசி பாடலின் ஒலிப்பதிவின்போது எடுத்த வீடியோவை பகிர்ந்துள்ளார்.
சென்னை வடபழனி பிரசாத் ஸ்டுடியோவில் ’தமிழ்ச்செல்வன்’ என்ற படத்திற்காக இளையராஜா இசையில் எஸ்பிபி பாடிய பாடல்தான் அவர் பாடிய கடைசி பாடல் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு உள்ளது
மேலும் அந்த வீடியோவில் இளையராஜா இசையில் கே.பாலசந்தர் இயக்கத்தில் வெளியான ’புதுப்புது அர்த்தங்கள்’ என்ற திரைப்படத்தில் இடம்பெற்ற ’கேளடி கண்மணி’ பாடலை இளையராஜாவுக்கு எஸ்பிபி அவர்கள் பாடிக் காண்பித்து தனக்கு மிகவும் பிடித்த பாடல்களில் ஒன்று’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
Miss you SPB Sir pic.twitter.com/msTzEkbsFD
— John Mahendran (@johnroshan) September 26, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com