மியாண்டட் சிக்ஸ் அடித்த மேட்ச், உலகக்கோப்பை இறுதி போட்டி: எஸ்பிபியின் கிரிக்கெட் நினைவலைகள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் ஒரு மிகச் சிறந்த பாடகர், இசையமைப்பாளர் மட்டுமின்றி தீவிரமான, வெறித்தனமான கிரிக்கெட் ரசிகர் என்பது பலரும் அறிந்த உண்மை. இந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் குஷ்பு நடத்திய தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட எஸ்பிபி அவர்கள் கிரிக்கெட் வீரர்களுடன் தனக்கு இருந்த நட்பு குறித்து அவர் கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
நான் கல்லூரி காலத்திலிருந்தே கிரிக்கெட்டின் மிகப்பெரிய ரசிகன். சச்சின், அனில் கும்ப்ளே, டிராவிட் உள்பட பலர் கையெழுத்து போட்ட பேட் என்னிடம் உள்ளது. பர்சனலாக பல கிரிக்கெட் விளையாட்டு வீரர்களுடன் நண்பர்களாகவும் உள்ளேன்.
நான் கிரிக்கெட் பார்ப்பதற்கென்றே உலகின் பல நாடுகளுக்கு சென்று உள்ளேன். குறிப்பாக ஷார்ஜாவில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போட்டியில் கடைசி பந்தில் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மியாண்டட் சிக்ஸ் அடித்து வெற்றி பெற்ற போட்டியை நான் நேரடியாக பார்த்தேன். அன்று மாலை துபாயில் இசைக்கச்சேரியில் ஒன்று இருந்தது. அந்த இசைக் கச்சேரியில் கபில்தேவ் உள்பட கிரிக்கெட் வீரர்கள் அனைவரும் வருவதாகவும் இருந்தது. மேலும் நாங்கள் என்னென்ன இந்தி பாடல்கள் பாட வேண்டும் என்பதை கபில்தேவ் எங்களுக்கு எழுதி கொடுத்து இருந்தார்
ஆனால் அன்றைய போட்டியில் இந்திய அணி தோல்வி அடைந்ததை அடுத்து ஏற்பட்ட சோகத்தால் தங்களால் இந்த இசை நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என்றும் இருப்பினும் நீங்கள் சோகபாட்டு பாடாமல் சந்தோஷமான பாட்டுகளை பாடுங்கள் என்றும் கபில்தேவ் தனக்கு செய்தி அனுப்பினார் என்றும் எஸ்பிபி அவர்கள் அந்த பேட்டியில் கூறியிருந்தார்
மேலும் கடந்த 1983 ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போது இந்திய அணி தோல்வி அடைந்துவிடும் என்று கூறிய தனது சகோதரரை அடித்து விட்டதாகவும் எஸ்பிபி அவர்கள் அந்தப் பேட்டியில் கூறியுள்ளது சுவராஸ்யமான தகவலாக இருந்தது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout