காஞ்சி மடத்திற்காக பரம்பரை வீட்டை தானமாக கொடுத்த பிரபல பாடகர்

பழம்பெரும் பின்னணிப் பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்கள் காஞ்சி சங்கராச்சாரியாரின் தீவிர பக்தர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் தன்னுடைய பரம்பரை வீட்டை காஞ்சி மடத்திற்கு அவர் தானமாக எழுதி கொடுத்து விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளது

எஸ்பி பாலசுப்பிரமணி அவர்கள் தனது குடும்பத்துடன் சென்னைக்கு பல ஆண்டுகளுக்கு முன்பே குடியேறிவிட்டால் நெல்லூரில் உள்ள அவரது பரம்பரை வீடு பல ஆண்டுகளாக பூட்டியுள்ளது. இந்த வீட்டை விலைக்கு பலர் கேட்டாலும் பரம்பரை வீடு என்பதால் அதை விற்க எஸ்பி பாலசுப்ரமணியம் அவர்களுக்கு மனமில்லை. அதுமட்டுமின்றி ஏற்கனவே இந்த வீட்டை காஞ்சி மடத்திற்கு தானமாக கொடுக்கப் போவதாகவும் அவர் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அதனை அவர் செயல்படுத்தி உள்ளார்

காஞ்சி மடத்தை சேர்ந்த விஜயேந்திர சுவாமிகளிடம் அவர் தனது வீட்டை ஒப்படைத்து உள்ளதாகவும் அந்த வீட்டில் ஒரு சமஸ்கிருத வேத பாடசாலை ஆரம்பிக்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எஸ்பி பாலசுப்பிரமணியன் அவர்களின் இந்த தானத்தை பலர் பாராட்டியும், ஒரு சிலர் விமர்சனம் செய்தும் வருகின்றனர்