எஸ்பிபி முதலில் பாடியது எனக்குதான், எம்ஜிஆருக்கு அல்ல: சிவகுமார்
- IndiaGlitz, [Thursday,October 01 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி அவர்கள் சமீபத்தில் காலமானதை அடுத்து அவருடன் பழகிய நாட்கள், நேர்ந்த அனுபவங்கள் குறித்து பல திரையுலக பிரமுகர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
அந்த வகையில் பழம்பெரும் நடிகரான சிவக்குமார் வெளியிட்டுள்ள வீடியோவில் எஸ்பிபி குறித்த நினைவலைகளை பகிர்ந்துள்ளார். எஸ்பிபி அவர்களின் முதல் பாடல் எம்ஜிஆர் நடித்த ’அடிமைப்பெண்’ படத்தில் இடம்பெற்ற ’ஆயிரம் நிலவே வா’ என்ற பாடல்தான் என்றும், எஸ்பிபியின் முதல்பாடல் ஜெமினி கணேசன் நடித்த ’சாந்தி நிலையம்’ என்ற படத்தில் இடம்பெற்ற ’இயற்கை என்னும் இளைய கன்னி’ என்ற பாடல்தான் என்றும் கூறப்பட்டது
ஆனால் இந்த இரண்டு பாடல்களும் எஸ்பிபியின் முதல் பாடல் அல்ல என்றும் ரிலீஸ் வகையில் பார்த்தால் தன்னுடைய ’பால்குடம்’ படத்திற்காக எஸ்பிபி பாடிய ’மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல் தான் அவருடைய முதல் பாடல் என்றும் நடிகர் சிகுமார் கூறியுள்ளார்
1969 ஆம் ஆண்டு பொங்கல் தினத்தில் ’பால்குடம்’ திரைப்படம் ரிலீஸ் ஆனதாகவும், இந்த படத்தில் இடம்பெற்ற ’மல்லிகைப்பூ வாங்கி வந்தேன்’ என்ற பாடல், அடிமைப்பெண், சாந்தி நிலையம் பாடல்களுக்கு பின்னர் ரிகார்டிங் செய்யப்பட்டாலும், ’பால்குடம்’ படம் முதலில் ரிலீஸானதால் அவர் பாடிய முதல் பாடல் எனது படத்தில் தான் என்பதை நான் பெருமையுடன் கூறிக்கொள்ள முடியும் என்றும் சிவகுமார் தெரிவித்துள்ளார்
மேலும் அவர் எஸ்பிபியுடன் நிகழ்ந்த ஒரு சில நிகழ்வுகளையும் அந்த வீடியோவில் சிவகுமார் பகிர்ந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது
“அந்த வகையில் பார்த்தால் எனக்கு தான் SPB முதல் பாட்டு பாடியிருக்கிறார்..” - நினைவலைகள் #சிவகுமார் அவர்கள். ##sivakumar #ripspb #paalkudam pic.twitter.com/4YVSnQbtSN
— Johnson PRO (@johnsoncinepro) September 30, 2020