தனது பூர்வீக வீட்டை யாருக்கு எழுதிக்கொடுத்தார் எஸ்பிபி: ஒரு ஆச்சரிய தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த 25ஆம் தேதி காலமான நிலையில் அவருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர்களும் இரங்கல் தெரிவித்தனர் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் எஸ்பிபி அவர்கள் ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர் என்பதும் குறிப்பாக அவர் சங்கராச்சாரியார் மீது மிகுந்த பக்தி கொண்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எஸ்பிபி அவர்களின் மறைவு குறித்து சங்கரமடம் இரங்கல் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. அதில் எஸ்பிபி அவர்கள் சங்கராச்சாரியார்கள் மீது மிகுந்த பக்தி வைத்திருப்பவர் என்றும் அவரது இழப்பு இசையை உலகினருக்கு மட்டுமின்றி அனைத்து தர மக்களும் மிகுந்த வருத்தத்தை அளிக்கக்கூடியது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இசைக்கு அப்பாற்பட்டு ஆன்மீகத்திலும் அவர் தீவிர பற்று கொண்டவராக விளங்கினார் என்றும், அவரது பல பக்தி பாடல்கள் பக்தர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சங்கர மடத்தின் உள்ள சங்கராச்சாரியார்கள் மீது எஸ்பிபி ஆழ்ந்த பக்தியும் மரியாதையும் வைத்திருந்தார் என்றும் கடந்த பிப்ரவரி மாதம் நெல்லூரில் உள்ள அவரது பூர்வீக வீட்டை வேத நாத பாடசாலை தொடங்குவதற்காக சங்கர மடத்திற்கு அவர் தானமாக எழுதி கொடுத்து தனது பக்தியை வெளிப்படுத்தி உள்ளதாகவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தகவல் எஸ்பிபி ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments