எஸ்பிபி உடல்நிலை மீண்டும் கவலைக்கிடம்: மருத்துவமனையின் அறிக்கையால் அதிர்ச்சி!
- IndiaGlitz, [Monday,August 17 2020]
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் அவரது உடல்நிலை நேற்று முன்தினம் கவலைக்கிடமாக இருந்தாலும் நேற்றும் இன்றும் சீராக தேறி வருவதாகவும் செய்திகள் வெளியானது.
மேலும் சற்று முன்னர் எஸ்பிபி சரண் அவர்கள் தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோவில் தனது தந்தையின் உடல் தேறி வருவதாகவும் அனைவரது பிரார்த்தனையால் அவர் விரைவில் குணமாகி வீடு திரும்புவார் என்று தான் நம்புவதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில் சற்று முன்னர் எஸ்பி பாலசுப்ரமணியம் அனுமதிக்கப்பட்டிருந்த தனியார் மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் ’எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் அவர் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் தான் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் அவரது உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாகவும், அனுபவம் வாய்ந்த மருத்துவக் குழுவினர் அவரை தொடர்ந்து கண்காணித்து தகுந்த மருத்துவ சிகிச்சைகளை செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.
எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் மீண்டும் கவலைக்கிடமாக இருப்பதாக வெளியான தகவலால் அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைவருக்கும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.