வருங்காலத்தில் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும்: பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தனது தந்தையை எஸ்பி பாலசுப்பிரமணியன் குரலை தனது அனுமதி இன்றி பயன்படுத்திய பிரபல இசையமைப்பாளருக்கு எஸ்பிபி சரண் நோட்டீஸ் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் ஏஐ என்ற செயற்கை நுண்ணறிவு பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில் தற்போது சினிமா துறையிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக மறைந்த பிரபல பாடகர்களின் குரல்களை ஏஐ மூலம் பயன்படுத்தும் போக்கு அதிகரித்து வருகிறது. சமீபத்தில் கூட இசைப்புயல் ஏஆர் ரகுமான் தகுந்த அனுமதி பெற்று இரண்டு பழம்பெரும் பாடகர்களின் குரல்களை ஏஐ மூலம் பயன்படுத்தினார் என்ற செய்தியை பார்த்தோம்.
இந்த நிலையில் பிரபல தெலுங்கு இசையமைப்பாளர் விவேக் சாகர் என்பவர் தெலுங்கு படம் ஒன்றுக்காக எஸ்பிபி அவர்களின் குரலை ஏஐ மூலம் பயன்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதை பேட்டி ஒன்றில் அவரே ஒப்புக்கொண்டதாக செய்தி வெளியான நிலையில் எஸ்பிபியின் மகன் எஸ்பிபி சரண் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீஸில் தனது தந்தையின் மறைவுக்கு பிறகு ஏஐ மூலம் அவரது குரல் பயன்படுத்துவது என்பது மகிழ்ச்சியான விஷயம் தான் என்றாலும், எங்களுடைய அனுமதி பெறாமல் பயன்படுத்துவது வேதனையான விஷயம் என்று எஸ்பிபி சரண் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு திறமையாளரின் குரல் வணிக சுரண்டலுக்காக அனுமதி இன்றி பயன்படுத்தக்கூடாது, இந்த நிலை தொடர்ந்தால் இசை துறையில் தங்களது குரலை சொத்தாக கருதும் பாடகர்களின் வாழ்வாதாரம் ஆபத்துக்குள்ளாகும் என்றும் எஸ்பிபி சரண் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தனது தந்தையின் குரலை முறையாக அனுமதி இன்றி பயன்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று நோட்டீஸில் குறிப்பிட்டுள்ள எஸ்பிபி சரண், தகுந்த நஷ்ட ஈடு மற்றும் ராயல்டி வழங்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இதற்கு இசையமைப்பாளர் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com