எழுந்து அமர்ந்தார் எஸ்.பி.பி: நல்ல செய்தி சொன்ன எஸ்.பி சரண்
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்பிரமணியம் அவர்கள் கடந்த சில நாட்களாக கொரோனாவால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது தெரிந்ததே.
சமீபத்தில் அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்தாலும் நுரையீரல் உள்ளிட்ட ஒருசில பாதிப்பு காரணமாக தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் எஸ்பிபி உடல்நிலை குறித்து அவ்வப்போது தகவல் தெரிவித்து வரும் அவரது மகன் எஸ்பிபி சரண் அவர்கள் சற்று முன் வெளியிட்டுள்ள வீடியோவில் ’எனது தந்தை எஸ்பிபியின் உடல்நிலை குறித்து கடந்த 10ஆம் தேதி தெரிவித்தேன். இந்த நிலையில் இந்த நான்கு நாட்களில் அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளது.
அவரது நுரையீரலிலும் முன்னேற்றம் அடைந்து இருப்பது எக்ஸ்ரே படங்களில் இருந்து தெரிய வருகிறது. மேலும் அவர் 15 முதல் 20 நிமிடம் வரை எழுந்து உட்கார்ந்து இருக்கிறார். பிசியோதெரபி சிகிச்சை மூலம் அவர் அவர் நன்றாக தேறி வருகிறார். மேலும் அவர் பேசுவதற்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. எனவே அவரது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் அடைந்ததற்கு ரசிகர்களின் பிரார்த்தனையே காரணம் என்பதால் மீண்டும் ஒருமுறை ரசிகர்களுக்கு நன்றி கூறிக் கொள்கிறேன் என்று எஸ்பிபி சரண் தெரிவித்துள்ளார்.
Today’s update from#SPBCharan about #SPB Sir’s Health#SPbalasubramanyam pic.twitter.com/nuuCuVO9N1
— Diamond Babu (@idiamondbabu) September 14, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com