1 கோடியே 70 லட்சம் பேரை காவு வாங்கிய ஸ்பானிஷ் ஃப்ளூ!!! நோயிலிருந்து இந்தியா மீண்ட கதை!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
இன்ஃப்ளூயன்ஸா எனப்படும் ஸ்பானிஷ் காய்ச்சல் உலகம் முழுவதும் 5 கோடி மக்களை கொன்று குவித்ததாக உலகச் சுகாதார அமைப்பும் அமெரிக்க நோய்க் கட்டுப்பாட்டு மையமும் தகவல் தெரிவிக்கிறது. இந்த நோய்த்தொற்று பல மேற்கத்திய நாடுகள் முழுக்க பரவியிருந்தாலும் இந்தியாவில் அதன் தாக்கம் அதிகமாக இருந்தது என பிரிட்டிஷ் இந்தியாவின் தரவுகள் கூறுகின்றன. அதுமட்டுமல்லாது இந்த நோய்த் தொற்றால் அதிகம் உயிரிழந்தது இளைஞர்கள் என்பதுதான் ஆச்சரியத்தை ஏற்படுத்தும் விஷயம்.
ஸ்பானிஷ் காய்ச்சல் என்று சொன்னவுடன் ஸ்பெயின் நாட்டில் இருந்து இந்நோய்த் தொற்று பரவியிருக்கும் எனப் பெரும்பலானோர் நினைக்கின்றனர். இந்த நோய்த்தொற்று முதலாம் உலகப் போருக்கு பின்பு பல மேற்கத்திய நாடுகளை மையமாக வைத்து முதலில் பரவ ஆரம்பித்தது. 1918 – 1920 இந்த இடைப்பட்ட காலத்தில் உலகம் முழுவதும் பல நாடுகளிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தி 5 கோடி பேரை காவு வாங்கியதாகவும் தரவுகள் கூறுகின்றன. முதலாம் உலகப்போரில் கலந்து கொண்ட வீரர்களே இந்நோயை உலக நாடுகள் முழுவதும் பரப்பியதாகவும் கூறப்படுகிறது. முதலில் இந்நோயைப் பற்றி தணிக்கைச் செய்யப்படாத ஸ்பெயின் பத்திரிக்கைகள் ஐரோப்பா முழுவதும் செய்திகளை வெளியிட்டன. ஐரோப்பிய நாடுகளில் இது பரபரப்பாக ஸ்பானிஷ் ஃப்ளூ எனப் பேசப்பட்டது. அதற்குப் பிறகே இந்நோய்த் தொற்றிற்கு ஸ்பானிஷ்ஃப்ளூ எனப் பெயரும் வந்தது. ஆனால் இந்நோய் முதலில் எந்த நாட்டில் இருந்து பரவியது என்பதற்கான ஆதாரம் இதுவரை வெளியாக வில்லை.
உலக வரலாறே மறந்து விட முடியாத அளவிற்கு ஒரு பெருந்தொற்று இருந்தது என்றால் அது ஸ்பானிஷ்ஃப்ளூவாகத்தான் இருக்க வேண்டும். 1918 இல் இந்நோய்த் தொற்றால் ஏற்பட்ட பாதிப்பை இதுவரை இந்த உலகம் சந்திக்கவில்லை. தற்போது அந்த வரிசையில் கொரோனா வந்துவிடுமோ என்ற அச்சத்தில்தான் பல ஊடகங்கள் ஸ்பானிஷ்ஃப்ளூ பற்றி பேச அரம்வித்து இருக்கின்றன. உலக மக்கள் தொகையில் குறைந்தது 20-40% பேர் இந்நோய்த் தொற்றால் பாதிக்கப் பட்டிருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மருத்துவ அறிவோ, அறிவியல் அறிவோ இல்லாத காலக் கட்டத்தில் இந்நோய்த் தொற்றை பற்றிய எந்த விழிப்புணர்வும் இல்லாமல் மக்கள் கொத்துக் கொத்தாக செத்து மடிந்தனர்.
மேலும், இந்நோய் பற்றி வெறுமனே நுண்ணுயிரியால் ஏற்படும் பாதிப்பு என்ற அறிவு மட்டுமே இருந்தது. ஒருவரிடம் இருந்து மற்றவர்களுக்கு பரவும் என்பதை கூறிய மருத்துவர்கள் இது பாக்டீரியாவினால் பரவுகிறது எனறே நம்பினர். அக்காலக் கட்டத்தில் வைரஸை பற்றிய எந்த அறிவும் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ஆன்டிபாடி பற்றிய ஆய்வுக் கருத்துக்களும் 1928 இல் தான் கண்டுபிடிக்கப்பட்டது. அதனால் இந்நோய் தொற்றை எப்படி கையாளுவது என்பது போன்ற சாதாரண மருத்துவ அறிவும் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை.
இதைத்தவிர இந்நோய்த்தொற்று சில நல்ல காரியங்களையும் உலகத்தில் ஏற்படுத்தியது. அதாவது ஸ்பானிஷ்ஃப்ளூ காய்ச்சலால் பல நாடுகளிலும் இளைஞர்கள் மட்டுமே அதிகமாக உயிரிழந்தனர். இதனால் திருணமத்திற்கு ஆண்கள் பற்றாக்குறை ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அதிகபடியான ஆண்களின் இறப்பினால் பெண்கள் வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அன்றைக்கு மட்டுமே 21% அமெரிக்க பெண்கள் வேலைக்குச் சென்றதாகத் தரவுகள் கூறுகின்றன. அதிக அளவில் பெண்கள் வேலைக்கு சென்றதால் அவர்களுக்கு ஆண்களுக்கு நிகரான கூலித் தர வேண்டும் என உரிமைக்குரல் எழுப்பப் பட்டது. அதன் மூலம் ஆண்களுக்கு நிகரான பல உரிமைகளை தொழில்துறையில் பெண்கள் மீட்டெடுத்தனர். மேலும் ஸ்பானிஷ்ஃப்ளூ நோய் பாதிப்புக்கு பிறகு பிறந்த குழந்தைகள் இதய கோளாறுடன் இருப்பதாக பிரிட்டன் ஊடகங்கள் செய்தி வெளியிட்டு இருந்தன. கரு வளர்ச்சி குறைவாக இருப்பதாகவும் கூறப்பட்டது. அமெரிக்காவில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5,50,000 பேர் அதாவது 0.5% எனக் கூறப்படுகிறது. இந்தியாவில் இறப்பு விகிதம் 5.2% அதாவது 1 கோடியே 70 லட்சம் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் ஸ்பானிஷ்ஃப்ளூ வரலாறு
முதலாம் உலகப்போரில் இருந்து திரும்பி வந்த இராணுவ வீரர்கள் முதன் முதலில் மும்பை நகரங்களுக்கு இந்நோய்த்தொற்றை கொண்டு வந்தனர். இப்படி பரவ ஆரம்பித்த இந்நோய் வெகு சீக்கிரமே நாடு முழுவதும் கடும் அழிவுகளை ஏற்படுத்தியது. அன்றைய பிரிட்டிஷ் காலத்தில் இந்நோயால் பாதிக்கப்பட்ட இந்தியர்களின் எண்ணிக்கை 1.8 கோடி எனவும் தகவல் கூறப்படுகிறது. அதாவது மொத்த இந்திய மக்கள் தொகையில் 6% பேருக்கு இந்நோய் பரவியிருந்தது. இந்நோய்க்கு எதிராக பிரிட்டிஷ் அரசாங்கம் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வில்லை எனவும் இந்தியர்களை காப்பாற்றுவதற்கு அவர்கள் அக்கறை காட்டவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. 1000 இந்தியர்களில் 61.6% பேரை இந்நோய் தாக்கியது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே சமயத்தி ல்பிரிட்டிஷ் இல் இந்நோய் 1000 பேரில் /9 பேருக்கு மட்டுமே பரவியது.
காந்தி ஆசிரமத்தையும் ஸ்பானிஷ்ஃப்ளூ விட்டு வைக்கவில்லை. காந்திக்கும் ஆசிரமத்தில் உள்ள மற்றவர்களுக்கு;ம இந்நோய் பாதிப்பு ஏற்பட்டது. அந்த சமயத்தில் காந்தி கடும் உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டார். தனக்கு வாழ்க்கை மீதிருந்த ஆசையே போய்விட்டதாகவும் காந்தி கூறியிருந்தார். காய்ச்சல், கை – கால்களில் வலி, மூச்சுக் குழாய் வீக்கம், கண்வலி போன்றவை இந்நோயின் அறிகுறியாக அந்நாட்களில் இந்தியா மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப் பட்டது. அதோடு நெருக்கமான இடங்கள், சந்தைகள், சாலைகள் போன்றவற்றில் நடமாட வேண்டாம் எனவும் மக்களை எச்சரித்து இருந்தனர்.
இந்தியாவில் அந்நாட்களில் இருந்த பிரிட்டிஷ் அரசாங்கத்தை விட அமைப்புச் சாரா நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள்தான் இந்நோயை கட்டுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றின. நோயைத் தடுக்க கிறிஸ்தவ சபை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் சார்பாக பல்லாயிரக் கணக்கான தற்காலிக மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. பல முகாம்களும் அமைக்கப் பட்டு மக்களை நோயில் இருந்து காப்பாற்றுவதற்காக கடுமையான முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. சுகாதார அமைப்பின் மூலமாக அரசு மருந்துகளை வழங்கியது. இப்படி கடுமையான போராட்டங்கள் தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனங்களின் உதவியோடு இந்தியா இந்நோயில் இருந்து மீண்டு வந்தது என்பதும் கொரோனா நேரத்தில் கவனிக்க வேண்டிய முக்கிய வரலாறு.
இந்நோய் ஏற்படுத்திய தாக்கத்திற்கு பிறகுதான் 1923 இல் கருத்துப் பரிமாற்றத்திற்காகவும் அனைத்து நாடுகளையும் ஒருங்கிணைக்கும் விதமாகவும் Leak of National என்ற அமைப்பு தோற்றுவிக்கப் பட்டது. இந்நோய் தொற்று ஏற்படுத்திய தாக்கத்தினால் சுகாதார கட்டமைப்பு பற்றிய விழிப்புணர்வை உலக நாடுகள் கைக்கொண்டன. முதன் முதலாக 1920 இல் ரஷ்யா சுகாதார மேம்பாட்டு கட்டுமானங்கள், மருந்து விரிவாக்கத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டது. அதுவரை சுகாதாரம் என்பதை இந்த உலகம் ஆடம்பரமாகத்தான் கருதி வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. பல ஆண்டுகள் கழித்து 1948 இல் உலகச் சுகாதார அமைப்பு தோன்றுவதற்கு இந்நோய் தொற்று ஒரு முக்கிய காரணியாக இருந்தது என்றால் அது மிகையாகாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments