தனுஷை நேசிக்கும் ஸ்பெயின் ரசிகர்கள்: இயக்குனர் பாராட்டு
Send us your feedback to audioarticles@vaarta.com
தனுஷ் நடித்த ஹாலிவுட் திரைப்படமான 'The Extraordinary Journey Of The Fakir' என்ற திரைப்படம் இன்னும் இந்தியாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றாலும் பிரான்ஸ், ரஷ்யா, இத்தாலி, நெதர்லாந்து உள்பட உலகின் பல நாடுகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் இந்த படம் சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ரிலீஸ் செய்யப்பட்டது. எதிர்பார்த்ததைவிட இந்த படத்திற்கு ஸ்பெயின் ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்துள்ளனர். இதனால் படக்குழுவினர் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நிலையில் ஸ்பெயினில் இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பை அறிந்ததும் இந்த படத்தின் இயக்குனர் கென் ஸ்காட் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ''The Extraordinary Journey Of The Fakir' திரைப்படம் ஸ்பெயினில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாகவும், ஸ்பெயினில் உள்ளவர்கள் தனுஷை மிகவும் நேசிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். இயக்குனர் கென் ஸ்காட்டின் இந்த டுவீட்டை நடிகர் தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் ரீடுவீட் செய்து நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்த படம் ஏற்கனவே நார்வே சர்வதேச திரைப்பட விழாவிலும், பார்சிலோனா சர்வதேச திரைப்பட விழாவிலும் விருது பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Thank you ken. You made it possible. Super thrilled about this. https://t.co/6gd9B3uBrL
— Dhanush (@dhanushkraja) May 15, 2019
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments