ஸ்பெயின் துணை பிரதமருக்கு கொரோனா: சீனாவை முந்திய சோகம்

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து பரவினாலும் சீனாவில் தற்போது அந்த வைரஸ் கட்டுக்குள் அடங்கியுள்ளது., கடந்த சில நாட்களாக சீனாவில் புதிதாக யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

ஆனால் சீனாவில் இருந்து பரவிய இத்தாலி மற்றும் ஸ்பெயின் நாடு உலகிலேயே மிக அதிகமாக கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளாக உள்ளது. மேலும் உலகிலேயே அதிக நபர்கள் கொரோனாவால் உயிரிழந்த நாடாக இத்தாலி இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது இடத்தை ஸ்பெயின் பெற்றுள்ளது. ஸ்பெயின் நாட்டில் மட்டும் இதுவரை 3647 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளதாகவும் மொத்தம் 49 ஆயிரம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

இந்த நிலையில் அதிர்ச்சி தரும் மற்றொரு செய்தியாக ஸ்பெயின் நாட்டின் துணைப் பிரதமரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து துணை பிரதமர் கர்மேன் கால்வோ அவர்களின் அலுவலகம் கூறியபோது ’துணை பிரதமர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தற்போது உரிய சிகிச்சை பெற்று வருவதாகவும் அவரது உடல்நிலை தற்போது தேறி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

ஏற்கனவே இங்கிலாந்து நாட்டின் இளவரசர் சார்லஸ் அவர்களுக்கு கொரோனா தொற்றியுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டின் துணை பிரதமருக்கும் கொரோனா தொற்றியுள்ளது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

More News

அமைச்சர் விஜயபாஸ்கரை வித்தியாசமாக பாராட்டிய பார்த்திபன்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி ஆயிரக்கணக்கான உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்கும் நிலையில் இந்தியாவில் எடுத்த முன்னெச்சரிக்கை அதிரடி நடவடிக்கைகளால்

கொரோனா விவகாரம்: பிரகாஷ்ராஜ் செய்த பிரமாதமான செயல்

கொரோனா அச்சம் காரணமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று இரண்டாவது நாளே ஏழை எளியவர்களின் வீடுகளில் அடுப்பு எரியாமல் பட்டினி

கொரோனா குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் கூறிய குட் நியூஸ்

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் ஒரு பக்கம் அதிகரித்துக் கொண்டே இருந்தாலும் இன்னொரு பக்கம் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அவர்களின் அதிரடி நடவடிக்கையாலும்,

தமிழகத்தில் மேலும் மூவருக்கு கொரோனா: 18 வயது இளைஞரும் ஒருவர்

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வரும் நிலையில்

ரஷ்யா தீவுகளில் 7.5 ரிக்டர் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!!! சிறிய சுனாமி அலைகள்!!!

இன்று காலை ரஷ்யாவின் குரில் தீவுகளில் 7.5 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.