கொரோனாவால் பாதிக்கப்பட்ட எஸ்பி முத்துராமன் உடல்நிலை: மருத்துவமனை அறிக்கை!
Send us your feedback to audioarticles@vaarta.com
ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்பட பல முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குநர் எஸ்பி முத்துராமன் அவர்கள் சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதாக செய்திகள் வெளியானது. இதனை அடுத்து அவர் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இயக்குநர் எஸ்பி முத்துராமன் அவர்களின் உடல்நிலை குறித்து அவ்வப்போது மருத்துவமனை அறிக்கை வெளியிட்டு வந்த நிலையில் சற்று முன் அவர் கொரோனாவில் இருந்து முற்றிலும் குணமாகி விட்டதாக மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
இயக்குனர் எஸ்பி முத்துராமன் அவர்கள் தங்களது மருத்துவமனையில் கோவிட் பாதிப்பு காரணமாக ஏப்ரல் 7ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார். அதன் பின்னர் அவருடைய உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து சிகிச்சை அளித்து வந்தனர்.
இந்த நிலையில் தற்போது அவருக்கு கொரோனா வைரஸ் முற்றிலும் குணமாகி விட்டதால் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார். அவரது உடல் நிலை தற்போது சீராக இருக்கிறது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பி முத்துராமன் அவர்கள் கொரோனாவில் இருந்து குணமாகிவிட்டதை என்று திரையுலகினர் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout