மார்ச் 1 க்கு அப்புறம் பாருங்க… சசிகலா குறித்து பகீர் ஏற்படுத்தும் அரசியல் வீடியோ!
- IndiaGlitz, [Saturday,February 13 2021]
பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் இருந்து கடந்த 27 ஆம் தேதி விடுதலை ஆனார் திருமதி சசிகலா. கொரோனாவால் பாதிக்கப்பட்டு பெங்களூர் விக்டோரியா மருத்துவமனையில் இருந்தபோதுதான் இவரது 4 ஆண்டுகால சிறை தண்டனை முடிவுக்கு வந்தது. இந்நிலையில் அதே மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை எடுத்துக் கொண்ட சசிகலா பின்னர் 7 நாட்கள் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு தமிழகம் வருவார் எனக் கூறப்பட்டது.
கொரோனாவால் பாதிக்கப்பட்ட சசிகலா ஏன் இப்படி தொண்டர்கள் புடைசூழ வரவேண்டும் எனச் சிலர் கேள்வி எழுப்பி இருந்தனர். ஆனால் சசிகலாவின் வருகையை அமமுக தொண்டர்கள் மட்டும் அல்லாது சில அதிமுக நிர்வாகிகளே வரவேற்று கொண்டாடியது தமிழகத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் சசிகலாவின் வருகையால் ஒட்டுமொத்த அரசியல் களத்திலும் மாற்றம் வரும். அதோடு அதிமுகவில் பெரிய பிளவு ஏற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது எனப் பல திடுக்கிடும் தகவல்கள் கூறப்பட்டன.
இந்நிலையில் பெருத்த வரவேற்பு அளிக்கப்பட்ட சசிகலாவின் வருகைக்குப் பின்னர் அவர் வெறுமனே அமைதியாக இருக்கிறார் என்று தற்போது சிலர் சசிகலாவை விமர்சிக்க தொடங்கி விட்டனர். மேலும் அதிமுகவில் எந்த பிளவுகளும் ஏற்படவில்லை என்ற கருத்துகளும் தற்போது வெளிவரத் தொடங்கி விட்டன. இந்த விமர்சனத்துக்கு பதில் அளித்த மூத்த அரசியல் நோக்கர் திரு.எஸ்.பி.லக்ஷமணன் அவர்கள் மார்ச் 1 ஆம் தேதிக்கு பின்பு தமிழக அரசியல் களத்தின் போக்கே மாறிவிடும்.
அதோடு, திருமதி சசிகலா தேர்தலில் போட்டியிட்டால் கூட ஆர்ச்சர்யப் படுவதற்கு ஒன்றும் இல்லை. இதற்கான வாய்ப்புகள் இருக்கத்தான் செய்கின்றன. மேலும் சசிகலாவின் தாக்கம் அதிமுகவில் பல சர்ச்சைகளை ஏற்படுத்தும் என்பது போன்ற பல்வேறு திடுக்கிடும் கருத்துக் கணிப்புகளை நமக்கு பிரத்யேக பேட்டியாக வழங்கி உள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.