பணத்தை பறிக்கொடுத்த முதியவருக்கு ரூ.1 லட்சம் தந்த எஸ்.பி… நெகிழ்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Saturday,November 20 2021]

ஜம்மு&காஷ்மீர் மாநிலத்தில் பணத்தைப் பறிக்கொடுத்து வருந்திய முதியவர் ஒருவருக்கு காவல் அதிகாரி ஒருவர் தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்தைக் கொடுத்து ஆறுதல் அளித்துள்ளார். இந்தச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

ஸ்ரீநகர் மாவட்டத்தில் போரி கதால் எனும் பகுதியில் நிலக்கடலை விற்று பிழைப்பு நடத்திவரும் முதியவர் அப்துல் ரஹ்மான். 90 வயதான இந்த முதியவர் தன்னுடைய இறுதிச்சடங்கிற்காக வாழ்நாள் முழுவதும் உழைத்து ரூ.1 லட்சம் பணத்தைச் சேர்த்து வைத்துள்ளார். அவரிடம் இருந்து இரக்கமே இல்லாத கொள்ளையர்கள் யாரோ பணத்தை திருடியுள்ளார். இதனால் சோகமான அப்துல் ரஹ்மான் பற்றிய தகவல் சோஷியல் மீடியாவில் பரவியது.

இதைப் பார்த்து கடும் வருத்தம் அடைந்த எஸ்.பி சந்தீப் சௌத்ரி, முதியவருக்கு தன்னுடைய சொந்த பணத்தில் இருந்து ரூ.1 லட்சத்தை கொடுத்து ஆறுதல் அளித்திருக்கிறார். இதையடுத்து எஸ்பியை பலரும் பாராட்டி வருகின்றனர்.

SP gives Rs 1 lakh to 90 year old  seller