அப்பாவுக்காக பாடுனேன்.. தேனினும் இனிய குரலில் பாடிய எஸ்பிபி மகள்..! வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உலக புகழ் பெற்றவர் என்பது அனைவரும் அறிந்ததே. அதேபோல் அவருடைய மகன் எஸ்பிபி சரண் பாடகர், தயாரிப்பாளர், நடிகர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் எஸ்பிபி யின் மகளும் ஒரு பாடகி என்பது பலருக்கு தெரியாத உண்மை தற்போது தெரிய வந்துள்ளது.
இந்திய திரையுலகின் முன்னணி பாடகர்களில் ஒருவரான எஸ்பி பாலசுப்ரமணியன் கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக காலமானார். அவருடைய மறைவிற்கு இந்திய திரை உலகமே இரங்கல் தெரிவித்தது என்பதும் நாடே சோகத்தில் மூழ்கியது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தற்போது விஜய் டிவியில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி நடைபெற்று வரும் நிலையில் அதில் எஸ்பி பாலசுப்பிரமணியம் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். குறிப்பாக எஸ்பிபி மகள் பல்லவி முதல் முறையாக ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்டது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை அளித்தது.
தனது சகோதரி குறித்து எஸ்பிபி சரண் கூறிய போது தனது சகோதரியின் குரல் வித்தியாசமான குரல், எங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்குமே அப்படி ஒரு குரல் கிடையாது, ஆனால் திருமணத்திற்கு பிறகு பாடுவதை நிறுத்திவிட்டார்’ என்று கூறினார்.
அப்போது ஸ்வேதா மேனன் ’எங்களுக்காக பாடலாமே’ என்று கேட்டபோது அவர் தனது தேனினும் இனிமையான குரலில் ஒரு பாடலை பாடினார். இவ்வளவு நாளா நான் கேட்டு பாடல, இப்ப மட்டும் பாடுற’ என எஸ்பிபி சரண் கேட்டபோது, ‘அப்பாவுக்காக பாடினேன்’ என்று பல்லவி பதிலளித்தார்.
இவ்வளவு அருமையான குரலை வைத்துக்கொண்டு அவர் தொடர்ந்து பாட வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது குறித்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com