இறந்து போன மகளை விர்ச்சுவல் உலகத்தில் பார்த்து ரசித்த அம்மா..! வேகம் பெறும் VR தொழில்நுட்பம்.- வீடியோ

  • IndiaGlitz, [Thursday,February 13 2020]

இறந்து போனவர்களை திரும்பவும் சந்திப்பது என்பது இயலாத காரியம். அன்புக்குரியவர்கள் இறந்தால் அவர்களின் நினைவுகளையும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களையும் தவிர எதுவும் நம்மிடம் எஞ்சியிருப்பது இல்லை. ஆனால் தொழில்நுட்பம் எதிர்காலத்தில் இந்த சோகத்தை மாற்றும் என நம்பிக்கை பிறந்துள்ளது.    

கண்டறியப்படாத ஒரு நோயினால் பாதிக்கப்பட்டு 2016-ஆம் இறந்துவிட்ட தனது மகளை வி.ஆர் ( Virtual Reality) தொழில்நுட்பம் மூலமாக சந்தித்த நிகழ்வை ஆவணப்படமாக வெளியிட்டிருக்கிறது தென்கொரியாவைச் சேர்ந்த ”Meeting You திரைக்குழு. கொரியாவைச் சேர்ந்த எம்.பி.சி என்ற நிறுவனம், சிறுமி நயோனின் உருவத்தை உண்மைக்கு மிக நெருக்கமாக வடிவமைத்துள்ளது.  

சிறப்பு கையுறை அணிந்து, தன் மகளின் நிழலைப் பார்க்கும் தாய் ஜாங்-ஜி-சங், மகள் நேயோனை தொட முயற்சிக்கிறார். இந்த அனுபவத்தைத் குறித்து தெரிவித்த ஜாங், “இது எனது கனவு. அந்த கனவை நான் வாழ்ந்துவிட்டேன்” என்கிறார்.

நெகிழ்ச்சியான இந்த சம்பவத்துக்கு பலர் மகிழ்ச்சி தெரிவித்து வந்தாலும், உளவியல் ரீதியாக இது எந்த விதமான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை ஆய்வு செய்யாமல், இதை ஊக்குவிப்பது சரியானதல்ல என உளவியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.