குழந்தை பெற்றுக் கொள்வதற்கு பரிசு தொகையா? இப்படியும் ஒரு விசித்திரம்!!!

  • IndiaGlitz, [Friday,January 08 2021]

 

கொரோனா நேரத்தில் இந்தியா உட்பட பல நாடுகளில் குழந்தை பிறப்பு அதிகரித்து இருக்கிறது. அதேபோல காண்டம் விற்பனையும் சூடு பிடித்து இருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. ஆனால் இதற்கு மாறாக தென் கொரியாவில் மட்டும் உலகிலேயே பிறப்பு விகிதம் தற்போது மிகவும் குறைந்து காணப்படுவதாகப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் அந்நாட்டு அரசு குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளுமாறு அறிவுரையும் வழங்கி வருகிறது.

இந்நிலையில் அந்நாட்டின் சவுத் ஜியோன்சாங் மாகாணத்தின் தலைநகரான சேங்வானில் இறப்பு விகிதத்தைக் காட்டிலும் பிறப்பு விகிதம் மிகவும் குறைந்து காணப்படுவதாகத் தகவல் கூறப்படுகின்றன. கடந்த 2020 ஆம் ஆண்டில் 2,75,815 பிறப்புகளும் 3,07,764 இறப்புகளும் பதிவாகி உள்ளது. இதில் இறப்பைக் காட்டிலும் பிறப்புகளின் எண்ணிக்கை குறைந்து வருவது தெரியவந்தது. மேலும் மக்கள் தொகையும் ஒரு மில்லியனுக்கும் கீழ் செல்லும் நிலை எற்பட்டு இருப்பது மேலும் கவலை அளித்து உள்ளது.

இந்நிலையில் அம்மாநகர நிர்வாகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதில் திருமணமாகும் புதிய தம்பதிகளுக்கு ஒரு லட்சம் டாலர் கடன் தொகை வழங்கப்படும் எனக் கூறப்பட்டு உள்ளது. இதன் இந்திய மதிப்பு குமார் 70 லட்ச ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்படி கல்யாணம் ஆகும்போது ரூ.70 லட்சம் கடன் தொகையைப் பெறும் அந்தத் தம்பதி ஒருவேளை ஒரு குழந்தைப் பெற்றுக் கொண்டால் வாங்கி கடனுக்கு வட்டி செலுத்தாமல் வெறுமனே கடனை மட்டும் திருப்பி கொடுக்கலாம்.

அப்படி இல்லாம் அந்தத் தம்பதிக்கு 2 குழந்தைகள் பிறந்தால் பெற்ற கடன் தொகையில் இருந்து 30% கட்டத் தேவையில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இன்னும் ஒருபடி மேலே சென்று 3 குழந்தைகளைப் பெற்றுக்கொண்டால் பெற்ற முழு கடனையும் திருப்பி செலுத்தாமல் கடன் தள்ளுபடியைப் பெறலாம் என்றும் அம்மாநகராட்சி குறிப்பிட்டு இருக்கிறது. இத்திட்டம் அம்மாநகராட்சியில் பிறப்பு விகிதத்தை அதிகப்படுத்தும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

மேலும் தென்கொரியாவில் கடந்த 2015–2019 ஆண்டுகளுக்கு இடையில் ஒரு மில்லியன் அதாவது 10 லட்சம் பேர் திருமணம் செய்து கொண்டதாகப் புள்ளிவிரவம் கூறுகிறது. ஆனால் இதில் 40% மக்களுக்கு குழந்தைகளே இல்லையாம். இதனால் தென் கொரியாவில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் 1,826 அமெரிக்கன் டாலர் உதவித்தொகை வழங்கவம் அந்நாட்டு அரசு முடிவெடுத்து உள்ளது. இப்புதிய திட்டம் வரும் 2022 அமல்படுத்தப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

More News

உடலுறவின்போது… மூச்சுதிணற வைப்பது கூட கிரிமினல் குற்றமா???

இங்கிலாந்து அரசாங்கம் பெண்களை மூச்சு திணற வைப்பது கூட கிரிமினல் குற்றம் என்பதற்கான புதிய சட்டம் ஒன்றை அமல்படுத்தி இருக்கிறது.

ஃபேஸ்புக் காதலனை நேரில் சந்திக்க விரும்பிய பிளஸ் 1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம்!

பேஸ்புக் காதலனை நேரில் சந்திக்கச் சென்ற 17 வயது பிளஸ்-1 மாணவிக்கு நேர்ந்த கொடூரம் கோவையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது 

நீ 'அசுரன்' என்றால் நான் 'ஈஸ்வரன்': டிரைலரில் உள்குத்து இருக்குதோ?

சிம்பு நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் உருவான 'ஈஸ்வரன்' திரைப்படத்தின் டிரைலர் இன்று மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இந்த படத்தின் டிரைலர் வெளியானது 

சித்ரா கணவரின் ஜாமீன் மனு: நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டு ஒரு மாதம் முடிந்த நிலையில், அவரது தற்கொலைக்கு காரணம் அவரது கணவர் ஹேம்ந்த் தான் என விசாரணையில் தெரிய வந்ததை

ஓய்வு அறிவிப்புக்கு பின் தல தோனியின் முதல் பதிவு: குவியும் லைக்ஸ்கள்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தல என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுபவருமான தோனி,  கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி நாடே சுதந்திர தினம் கொண்டாடிக் கொண்டிருந்த