'இந்தியன் 2' படத்தில் பிரபல தென்கொரிய நடிகை

  • IndiaGlitz, [Saturday,January 05 2019]

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் 18ஆம் தேதி தொடங்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

இந்த படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, துல்கர் சல்மான், காஜல் அகர்வால் ஆகியோர் நடிக்கவிருப்பதாக கூறபடுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல தென்கொரிய நடிகையும் பாடகியுமான Suzy Bae என்பவர் நடிக்கவுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளிவந்துள்ளது.

மேலும் இந்த படத்தின் பெரும்பாலான படப்பிடிப்புகள் தைவானில் படமாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது. லைகா தயாரிப்பில் அனிருத் இசையமைப்பில் உருவாகும் இந்த படம் 2020ஆம் ஆண்டு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.