கூட்ட நெரிசலில் சிக்கி பிரபல பாடகர் உயிரிழப்பு… அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்கொரியாவில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு அந்நாட்டைச் சேர்ந்த பிரபல பாடகரும் நடிகருமான லீ ஜிஹான்(24) உயிரிழந்துள்ளார். இந்தத் தகவல் அவருடைய ரசிகர்களுக்குக் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வார இறுதியில் உலகம் முழுவதும் ஹாலோவீன் நிகழ்ச்சிகள் கொண்டாடப்பட்டன. அதேபோன்று தென்கொரியாவின் தலைநகர் இட்டாவன் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற ஹாலோவீன் நிகழ்ச்சியில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞர்கள் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின்போது கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டதினால் 151 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 82 பேர் காயம் அடைந்ததாகவும் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது.
இதையடுத்து நேற்று தென்கொரியாவில் தேசிய துக்கநாள் அனுசரிக்கப்பட்டது. இந்தத் துயரமான சம்பவத்தின்போது பிரபல பாடகரும் நடிகருமான லீ ஜிஹான் உயிரிழந்துவிட்டதாக அவருக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனம் தற்போது செய்தி வெளியிட்டு உள்ளது. இந்தத் தகவலையடுத்து அவருடைய ரசிகர்கள் கடும் சோகத்தை வெளியிட்டு வருகின்றனர்.
லீ ஜிஹான் தென்கொரியாவின் பிரபல தொலைக்காட்சி நிகழ்ச்சியான புரொடக்யூஸ் 101 நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானவர். அதைத் தொடர்ந்து நாம் ஹியூன் டே நிகழ்ச்சியின் நட்சத்திரமாக ஜொலித்த இவர் தற்போது பிரபல பாடகராகவும் நடிகராகவும் அறியப்படுகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com