கொரோனாவுக்கு நடுவில் தேர்தல் நடத்தும் தென்கொரியா!!! நடைமுறை சாத்தியங்கள்!!!

  • IndiaGlitz, [Wednesday,April 15 2020]

 

உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பு கடும் பீதியை ஏற்படுத்தி வரும் நிலையில் தென்கொரியா நாடாளுமன்றத் தேர்தலை நடத்திவருகிறது. அந்நாட்டில் வாக்குப்பதிவு இன்று காலை முதலே நடைபெற்று வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மற்ற நாடுகள் கொரோனா பாதிப்புக்கு எதிராக போராடி வரும் நிலையில் ஒரு நாடு தனது ஒட்டுமொத்த மக்களையும் வாக்குச்சாவடிக்குள் அனுமதித்து வருகிறது.

வாக்காளர்கள் 1 மீட்டர் இடைவெளி விட்டு நிற்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். மேலும், அனைவரும் முகக்கவசம் மற்றும் கையுறைகள் அணிந்திருக்க வேண்டும். வாக்குச்சாவடிக்கு வருவதற்கு முனபே அவர்களது உடல் வெப்பநிலை பரிசோதிக்கப்படுகிறது. கிருமிநாசினிகள் தெளிக்கப்பட்ட பின்னர் வாக்காளர்களுக்கு வாக்குச்சீட்டு வழங்கப்படுகிறது.

அந்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலுக்காக 35 கட்சிகள் தங்களது வேட்பாளர்களை களம் இறங்கியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 300 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. இத்தேர்தலில் ஆளும் மின்ஜீ (ஜனநாயகம்) கட்சிக்கும், பழமைவாத ஐக்கிய எதிர்காலக் கட்சிக்கும் இடையில் கடுமையான போட்டிநிலவுகின்றன. கொரோனா பரவல் நிலவும் சமயத்தில் கட்சிகளின் ஊழல் போன்ற எந்த அம்சங்களையும் யாரும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. வரும் 2022 ஆம் ஆண்டில் அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வலிமையை நிரூபிக்க வேண்டிய முக்கியக் கட்டத்தில் இத்தேர்தல் நடைபெற்று வருகிறது.

சாத்தியங்கள்

கொரோனா அச்சத்தால் மக்கள் வாக்கு அளிப்பதற்கு வரமாட்டார்கள் எனக் கருதிய நிலையில் அந்நாட்டு மக்கள் அமைதியான வரிசையில் தங்களது முறைக்காகக் காத்திருந்து வாக்களித்துவருகிறார்கள். 11 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் இருக்கும் தென்கொரியாவில் 26 விழுக்காட்டினர் வாக்கு அளிக்கும் உரிமையைப் பெற்றிருக்கின்றனர். முதன் முறையாக 18 வயது நிரம்பிய இளைஞர்களும் இத்தேர்தலில் பங்குகொள்ள முடியும் என்பதால் இன்னும் எதிர்பார்ப்பு அதிகரித்து இருகிறது. பல துறையினருக்குத் தங்களது ஓட்டுக்களை தபால் மூலமும் செலுத்த உரிமை வழங்கப்பட்டு இருக்கிறது.

வாக்காளர்களின் உடல் வெப்பநிலை 37.5 செல்சியக்கும் மேல் அதிகரித்து இருந்தால் அவர்கள் ஒரு தனி வாக்களிக்கும் பகுதிக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்கள். கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு தபால் ஓட்டுப்போட உரிமை வழங்கப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்படும் பிரிவுகளில் பணியாற்றும் மருத்துவப் பணியாளர்கள் ஓட்டுப்போட வசதியாக ஒவ்வொரு மருத்துமனைக்கும் வெளியே வாக்குச்சாவடிகள் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் கொரோனா அறிகுறியால் அந்நாட்டில் 60 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். இவர்கள் வாக்கு அளிப்பதற்கான ஏற்பாடுகளைக் குறித்து அரசு சிந்தித்துவருகிறது. பெரும்பாலும் தேர்தல் என்றாலே ஒலிப்பெருக்கிகளை வைத்துக்கொண்டு அரசியல் கட்சித்தலைவர்கள் பெரும் சத்தத்தை எழுப்பிவருவார்கள். ஆனால் இந்த ஆண்டில் இதுபோன்ற எந்தச்செயலையும் பார்க்கமுடியவில்லை. ஊடகங்களில் தலைக்காட்டும் கட்சித்தலைவர்களும் வெறுமனே புன்னகைத்து வருகிறார்கள். கொரோனா, தேர்தல் நடத்தைகளை மிகவும் மென்மையாக மாற்றியிருப்பதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வருகின்றனர்.

கடந்த பிப்ரவரியில் ஒரு நாளைக்கு சுமார் 900 கொரோனா பாதிப்பு என அதிகரித்துவந்த நிலையில் தென்கொரியா தனது கண்டிப்பான நடவடிக்கையால் முற்றிலும் குறைத்து இருக்கிறது. தற்போது நடைபெறும் தேர்தலால் நோய்த்தொற்று அதிகரிக்கும் என அச்சம் நிலவினாலும் கடுமையான பாதுகாப்பு உத்தரவாதத்தின்கீழ் இந்த தேர்தல் நடைபெற்று வருகிறது. எனவே நோய்த்தொற்று அதிகரிப்பதற்கான வாய்ப்பு இல்லை என்றே அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இதுவரை தென் கொரியாவில் தேர்தல் ஒருமுறை கூட தள்ளிவைக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. 1952 இல் நடைபெற்ற தென்கொரிய போரின்போது கூட ஜனாதிபதி தேர்தல் முறையாக நடத்தப்பட்டது.

More News

மத்தியஅரசு அறிமுகப்படுத்திய “ஆரோக்கிய செயலி”  ஆப் ஏன் விமர்சிக்கப்படுகிறது???

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக மத்திய அரசால் கடந்த மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட செயலி “ஆரோக்கிய சேது”

மே 3 வரை எல்லாம் பத்தாது, 2022 வரை சமூக விலகல் வேண்டும்: ஹார்வர்டு பல்கலை

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மே 3ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் ஹார்வர்டு பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள்,

கொரோனாவிடம் இருந்து தப்பித்த சென்னையின் 2 மண்டலங்கள்: எப்படி சாத்தியமாயிற்று

ந்தியாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மகாராஷ்டிரா, டெல்லியை அடுத்து தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது.

கேரளாவிடம் இருந்து பாடம் கற்று கொள்ளுங்கள்: எஸ்.ஆர் பிரபு அறிவுரை

இந்தியாவில் முதல் முதலாக கேரளாவில்தான் கொரோனா வைரஸ் நோயாளி கண்டறியப்பட்டது. அதன்பின் கேரளாவில் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி நாட்டிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக முதலிடத்தில் இருந்தது 

ரஜினி, விஜய், தனுஷ் பட நாயகியின் கணவருக்கு கொரோனா? அதிர்ச்சி தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'சிவாஜி' விஜய் நடித்த 'அழகிய தமிழ்மகன்' தனுஷ் நடித்த 'திருவிளையாடல் ஆரம்பம்' விக்ரம் நடித்த 'கந்தசாமி' உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா