தென்கொரியாவில் தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் அகால மரணம்!!! கதிகலங்க வைக்கும் தகவல்!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தென்கொரியாவில் பருவகால நோயான காய்ச்சலுக்கு தடுப்பூசி போட்டுக்கொண்ட 25 பேர் உயிரிழந்து விட்டதாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதில் காய்ச்சலுக்கான தடுப்பூசி தயாரித்து விற்பனை செய்த உள்ளூர் மருந்து நிறுவனங்கள் மீது ஊடகங்கள் சந்தேகத்தை வெளிப்படுத்தி இருக்கின்றன.
தென்கொரியாவின் ஒட்டுமொத்த மக்கள் தொகை 5.2 கோடி. இதில் குறைந்தது 3 கோடி மக்களுக்கு உள்ளூரில் உள்ள 4 மருந்து நிறுவனங்கள் காய்ச்சலுக்கான தடுப்பூசி மருந்தை தயாரித்துக் கொடுத்து வருவதாகக் கூறப்படுகிறது. மற்றபடி பிரான்ஸில் இருந்து ஒரு மருந்து நிறுவனம் இத்தடுப்பூசி மருந்தை இதுநாள் வரையிலும் தயாரித்து கொடுத்து வருகிறது.
முதற்கட்டமாக தடுப்பூசி போட்டப்பின்பு உயிரிழந்ததாகக் கூறப்படும் 9 பேர் மரணம் குறித்து அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை செய்ததாகக் கூறப்படுகிறது. அதில் தடுப்பூசி போட்டுக் கொண்டதனால் அவர்கள் உயிரிழக்கவில்லை, ஒருவேளை ஒவ்வாமை காரணமாக உயிரிழந்து இருக்கலாம் என்ற சந்தேகத்தை அவர்கள் வெளிப்படுத்தி இருந்தனர்.
இந்நிலையில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி வரை அந்நாட்டில் 83 லட்சம் மக்களுக்கு காய்ச்சலுக்கான தடுப்பூசி போடப்பட்டு இருக்கிறது. அதில் 350 க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒவ்வாமை ஏற்பட்டு இருக்கிறது. மேலும் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்து இருக்கின்றனர். உயிரிழந்த 25 பேரில் 4 பேர் மட்டுமே பிரான்ஸ் நாட்டின் தடுப்பூசியை செலுத்திக் கொண்டவர்கள். மற்றவர்கள் அனைருவம் உள்ளூர் மருந்து நிறுவனங்கள் கொடுத்த தடுப்பூசி மருந்தைச் செலுத்திக் கொண்டவர்கள் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த 4 உள்ளூர் மருந்து நிறுவனங்களும் பணத்திற்காகவும் அரசாங்கம் சார்பாக இலவசமாகவும் தடுப்பூசி மருந்துகளை தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால் தற்போது தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பு உயிரிழந்த விவகாரம் குறித்து அந்நிறுவனங்கள் எந்த விளக்கத்தையும் இதுவரை வெளியிடவில்லை. இதனால் ஊடகங்கள் அந்த 4 மருந்து நிறுவனங்கள் மீது கடுமையான விமர்சனத்தை வெளியிட்டு வருகின்றன.
இந்தச் சம்பவத்தால் அடுத்த அறிவிப்பு வெளியிடப்படும் வரை மக்களுக்குத் தடுப்பூசி செலுத்தப்படாது என்ற விளக்கத்தை தென்கொரியா அரசாங்கம் வெளியிட்டு இருக்கிறது. ஆனால் ஏற்கனவே 350க்கும் மேற்பட்ட மக்களுக்கு ஒவ்வாமை, 25 பேர் மரணம் போன்ற தகவல்களை கேட்ட மக்கள் கடும் பதட்டத்துடனும் அச்சத்டனும் காணப்படுவதாகத் தகவல் வெளியாகி இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout