கொரோனாவில் இருந்து மீண்ட 51 பேர்களுக்கு மீண்டும் கொரோனா: அதிர்ச்சி தகவல்
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகம் முழுவதும் கொரோனா தொற்றினால் தினமும் ஆயிரக்கணக்கானோர் ஒரு பக்கம் பாதிப்பு அடைந்து வந்தாலும் இன்னொரு பக்கம் கொரோனாவில் இருந்து மீண்டு குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கொரோனாவுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையிலும் தினமும் பலர் குணமாகி வருவது நல்ல செய்தியே ஆகும்.
ஆனால் தென் கொரியாவில் கொரோனாவில் இருந்து குணமான 51 பேருக்கு மீண்டும் கொ0ரோனா வைரஸ் தொற்று இருப்பதாக உறுதி செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தென்கொரியாவில் உள்ள டாயிகு நகரத்தில் உள்ள மருத்துவமனையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட 51 பேர் முழுமையாக குணமடைந்துவிட்டதால் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இருப்பினும் அவர்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், அவர்களை சில நாட்கள் கழித்து பரிசோதனை செய்தபோது, 51 பேர்களுக்கும் மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது தெரிய வந்ததை அடுத்து அனைவரையும் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்து வந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மருத்துவ நிபுணர்கள், ‘கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தவர்களுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இல்லை என்றும், சிகிச்சையில், பரிசோதனையில் தவறோ அல்லது சிகிச்சை முழுமை பெறமாலோ டிஸ்சார்ஜ் செய்யப்பட்டிருந்தால் மட்டுமே இது சாத்தியப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால் இன்னும் ஒருசில மருத்துவர்களோ, ‘மனித உடலில் உள்ள ஆயிரக்கணக்கான கோடி செல்களில் பிரிக்க முடியாத வகையில் கொரோனா வைரஸ் ஒட்டிக்கொண்டிருக்கலாம் என்றும் அதனால் குணமானவர்களூக்கு கொரோனா மீண்டும் தாக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்கள். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments