ஷங்கரின் அடுத்த படத்தில் தென்கொரிய நடிகை தான் நாயகியா?

  • IndiaGlitz, [Wednesday,February 24 2021]

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் திரைப்படம் என்றாலே நட்சத்திர தேர்வு முதல் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வரை வித்தியாசங்கள் இருக்கும் என்பது தெரிந்ததே. அந்த வகையில் சமீபத்தில் ராம்சரண்தேஜா நடிக்கும் திரைப்படத்தை ஷங்கர் இயக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த படத்தின் நாயகி யார் என்ற கேள்வி ரசிகர்கள் மனதில் எழுந்துள்ளது.

இது குறித்து ஊடகங்களில் வெளியான தகவலின்படி ராஷ்மிகா மந்தனா இந்த படத்தில் நாயகியாக நடிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டது. இருப்பினும் படக்குழுவினர் இதனை இன்னும் உறுதி செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தென் கொரிய நடிகை சுஸி பே என்பவர் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் இது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் அறிவிப்பு வெளிவரும் என்றும் கூறப்படுகிறது. நடிகை சுஸி பே ஏற்கனவே கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கி வந்த ’இந்தியன் 2’ படத்திலும் நடிக்க பேச்சுவார்த்தை நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

வெங்கடேஸ்வரா கிரியேசன் என்ற நிறுவனம் மிகவும் பிரமாண்டமான தயாரிக்கும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.