பிரபாஸ் அடுத்த படத்தில் தென்கொரிய வில்லன்.. சீன, கொரிய மொழிகளில் ரிலீஸ் செய்ய திட்டம்.!
- IndiaGlitz, [Sunday,July 07 2024]
பிரபாஸ் நடித்த ’கல்கி 2898 ஏடி’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் இந்த படத்தின் வசூல் ரூ.800 கோடியை தாண்டி ரூ.1000 கோடி என்ற இலக்கை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்பதும் தெரிந்தது.
இந்த நிலையில் பிரபாஸ் தற்போது ’கண்ணப்பா’ என்ற திரைப்படத்திலும் ’ராஜா ஷாப்’என்ற திரைப்படத்திலும் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்க உள்ள அடுத்த திரைப்படம் குறித்த தகவல் வெளியாகி உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன் பிரபாஸ் நடிப்பில் சந்தீப் ரெட்டி என்பவரின் இயக்கத்தில் ’ஸ்பிரிட்’ என்ற படம் உருவாக இருப்பதாக செய்திகள் வெளியானது. இந்த நிலையில் இந்த படத்தில் பிரபல தென் கொரிய நடிகர் மா டாங் சியோக் என்பவர் வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் பிரபாஸ் காவல்துறை அதிகாரியாக நடிப்பதாகவும் உலகம் முழுவதும் குற்றங்கள் செய்து கொண்டிருக்கும் தென்கொரியா வில்லனை பிடிப்பதுதான் அவருக்கு கொடுக்கப்பட்ட இலக்கு என்றும் கூறப்படுகிறது.
மேலும் இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடிக்க இருப்பதாகவும் தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படத்தில் தென்கொரிய நடிகர் வில்லனாக நடிப்பதால் இந்த படத்தை கொரியா மற்றும் சீன மொழிகளிலும் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.