புறக்கணிக்கப்படும் தென்னிந்திய திரையுலகம்: பிரதமரிடம் தைரியமாக கூறிய நடிகரின் மனைவி
Send us your feedback to audioarticles@vaarta.com
நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். குறிப்பாக அமீர்கான், ஷாருக்கான், ரகுல் ப்ரித், ராஜ்குமார் ஹிரானி, வருண் ஷர்மா, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், கபில் ஷர்மா உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமருடன் புகைப்படம் எடுத்து கொண்ட நடிகர் ராம்சரண் தேஜாவின் மனைவி உபசானா, தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை மன வருத்தத்துடன் பிரதமருக்கு தெரிவித்துள்ளார். ‘பிரதமர் அவர்களே! தங்களுக்கும் தங்கள் பதவிக்கும் தென்னிந்திய மக்களாகிய நாங்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் தந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இதுபோன்ற கலைஞர்கள் கலந்து கொள்ளும் விழாவில் தென்னிந்திய கலைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கு உரியது’ என்று பதிவு செய்துள்ளார்.
தென்னிந்திய திரையுலகில் பாலிவுட் திரையுலகிற்கு இணையாக பல ஜாம்பவான்கள் இருந்து வரும் நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ உள்பட மிகச்சிலரே இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அரசியல்ரீதியாக தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் ராம்சரண் தேஜாவின் மனைவியின் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Dearest @narendramodi ji.
— Upasana Konidela (@upasanakonidela) October 19, 2019
JAI HIND ???? https://t.co/bGWdICLnsn pic.twitter.com/DUzpgpbSYA
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments