புறக்கணிக்கப்படும் தென்னிந்திய திரையுலகம்: பிரதமரிடம் தைரியமாக கூறிய நடிகரின் மனைவி

நேற்று டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி கலந்து கொண்ட நிலையில் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர். குறிப்பாக அமீர்கான், ஷாருக்கான், ரகுல் ப்ரித், ராஜ்குமார் ஹிரானி, வருண் ஷர்மா, ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ், கபில் ஷர்மா உள்பட பல பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமருடன் புகைப்படம் எடுத்து கொண்ட நடிகர் ராம்சரண் தேஜாவின் மனைவி உபசானா, தனது சமூக வலைத்தளத்தில் ஒரு கருத்தை மன வருத்தத்துடன் பிரதமருக்கு தெரிவித்துள்ளார். ‘பிரதமர் அவர்களே! தங்களுக்கும் தங்கள் பதவிக்கும் தென்னிந்திய மக்களாகிய நாங்கள் மிகுந்த மதிப்பும் மரியாதையும் தந்து கொண்டிருக்கின்றோம். ஆனால் இதுபோன்ற கலைஞர்கள் கலந்து கொள்ளும் விழாவில் தென்னிந்திய கலைஞர்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டிருப்பது வருத்தத்திற்கு உரியது’ என்று பதிவு செய்துள்ளார்.

தென்னிந்திய திரையுலகில் பாலிவுட் திரையுலகிற்கு இணையாக பல ஜாம்பவான்கள் இருந்து வரும் நிலையில் தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ உள்பட மிகச்சிலரே இந்த விழாவிற்கு அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே அரசியல்ரீதியாக தமிழகம் உள்பட தென்னிந்திய மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு இருந்து வரும் நிலையில் ராம்சரண் தேஜாவின் மனைவியின் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

கிருத்திகா உதயநிதிக்கு வாழ்த்து கூறிய 'பிகில்' நடிகை!

நடிகரும் அரசியல்வாதியுமான உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் ஆதரவில் 'உதவும் உள்ளங்கள்' என்ற ஆதரவற்ற குழந்தைகள் என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது.

விஜயகாந்த் இயக்குனரின் அடுத்த படத்தில் ஹீரோவாகும் கோபிநாத்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'நீயா நானா' என்ற நிகழ்ச்சியை பல வருடங்களாக நடத்தி வரும் கோபிநாத், ஏற்கனவே 'நிமிர்ந்து நில்' உள்பட ஒருசில படங்களில் நடித்துள்ளார்.

'அசுரன்' திரைப்படத்திற்கு வாழ்த்து தெரிவித்த தெலுங்கு சூப்பர் ஸ்டார்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகிய 'அசுரன்' திரைப்படம் அக்டோபர் 4ஆம் தேதி வெளியாகி உலகம் முழுவதும் நல்ல வரவேற்பை பெற்றது 

சந்தானம் படத்தில் இணைந்த சிவாஜி-எம்ஜிஆர் நாயகி: 400வது படம் என தகவல்

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்த 'உயர்ந்த மனிதன்', 'பார் மகளே பார்,' புதிய பறவை', 'எங்கள் தங்க ராஜா', 'பாலும் பழமும்', 'பாவை விளக்கு' உள்பட பல படங்களிலும்

'கைதி' டைட்டிலில் கமலுக்கு கெளரவம் அளித்த இயக்குனர்!

நடிகர் கார்த்தி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'கைதி' திரைப்படம் வரும் 25ஆம் தேதி தீபாவளி விருந்தாக தமிழகம் முழுவதும் பிரமாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.