தென்னிந்தியாவில் பரவிய N440K வைரஸ் 15 மடங்கு உயிரிழப்பு ஏற்படுத்தக் கூடியது… அதிர்ச்சி தகவல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சீனாவில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்று கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் பரவத் தொடங்கியது. இந்தியாவில் கடந்த 2020 பிப்ரவரி வாக்கில் கண்டறியப்பட்ட கொரோனா வைரஸ் தொற்றின் முதல் அலை பின்னர் இந்தியா முழுக்கவே பரவியது. அதற்குப் பிறகு கொரோனா வைரஸின் மரபணு மாறிய (உருமாறிய) N440K எனும் புதிய வகை வைரஸை விஞ்ஞானிகள் தென்னிந்தியாவில் கண்டுபிடித்தனர். இந்த வைரஸ் ஒரு சிலருக்கு மட்டுமே பாதிப்பை ஏற்படுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த N440K வைரஸைப் பற்றி தற்போது விஞ்ஞானிகள் அதிர்ச்சி தரும் தகவல் ஒன்றை வெளியிட்டு உள்ளனர். அதாவது N440K எனும் வைரஸ் முதல் அலையில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸைவிட 15 மடங்கு அதிகம் மரணத்தை ஏற்படுத்தக் கூடியது என்றும் இந்த வைரஸ் ஒருவேளை இந்தியா முழுக்க பரவத் தொடங்கி இருந்தால் நிலைமை வேறுமாதிரியாக மாறி இருக்கும் எனவும் அச்சம் தெரிவித்து உள்ளனர்.
தற்போது இந்தியாவில் இரண்டாம் அலை தொற்றாக பரவிவரும் வைரஸ்கள் அனைத்தும் பிரிட்டன் மற்றும் அவற்றின் இரட்டை மரபணு மாறிய வைரஸ்கள்தான் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தென்னிந்தியாவில் பரவத் தொடங்கிய N440K எனும் வைரஸ் பற்றி கருத்து வெளியிட்டு உள்ள விஞ்ஞானிகள் கடந்த ஆண்டின் இறுதியில் ஒரு சிலருக்கு மட்டுமே இந்த வைரஸ்கள் பாதிப்பை ஏற்படுத்தின. பின்னர் இந்த வைரஸ் பாதிப்பை ஏற்படுத்த வில்லை. ஒருவேளை பாதிப்பை ஏற்படுத்தத் தொடங்கியிருந்தால் இது முதல் அலையைவிட படு மோசமாக இருந்த இருக்கும் எனவும் கூறியுள்ளனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com
Comments