பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா பாதிப்பு: விரைவில் குணமாக ரசிகர்கள் வாழ்த்து!

தென்னிந்தியாவின் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா மூன்றாவது அலை வீசி வருகிறது என்பதும் இதில் பொதுமக்கள் மட்டுமின்றி திரையுலக பிரபலங்களும், அரசியல் பிரபலங்களும், ஒரு சில மாநில முதலமைச்சர்களும், மத்திய அமைச்சர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள் என்பதை பார்த்து வருகிறோம்.

குறிப்பாக தமிழ் திரையுலகை பொறுத்தவரை கமல்ஹாசன், வடிவேலு, த்ரிஷா உள்பட பல பிரபலங்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மீண்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தென்னிந்தியாவின் பிரபல சூப்பர் ஸ்டார் நடிகர்களில் ஒருவரான சிரஞ்சீவி தனக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார்.

தனக்கு கொரோனா அறிகுறி லேசாக இருப்பதாகவும் நேற்று இரவு முதல் தான் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் தன்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் உங்கள் அனைவரின் வாழ்த்துக்களால் விரைவில் நான் குணம் ஆகி விடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அவர் விரைவில் குணமாக வேண்டும் என ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

மார்பகம் இருப்பதே அதற்குத்தானே: பிரபல நடிகையின் தைரியமான பதிவு!

மார்பகங்கள் பெண்களுக்கு இருப்பது குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதற்கு தானே என்றும், அதை சொல்வதற்கு எதற்காக வெட்கப்பட வேண்டும் என பிரபல நடிகை ஒருவர் கேள்வி எழுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறதா 'ராதே ஷ்யாம்? அதிர்ச்சியில் ரசிகர்கள்

பிரபாஸ், பூஜா ஹெக்டே நடிப்பில் உருவான 'ராதே ஷ்யாம்'  திரைப்படம் கடந்த 7ஆம் தேதி ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ரிலீஸ் தேதி ஒத்தி

மாஸ் மசாலா படம்: 'எதற்கும் துணிந்தவன்' படம் குறித்து இயக்குனர் பாண்டிராஜ்

சூர்யாவின் 'எதற்கும் துணிந்தவன்' திரைப்படம் மாஸ் மசாலா படமாக உருவாகி உள்ளதாகவும் இதுவரை தன்னுடைய படத்தில் இல்லாத ஹீரோயிசம் இந்த படத்தில் சூர்யாவுக்காக அமைக்கப்பட்டுள்ளதாகவும் இயக்குனர் பாண்டியராஜன்

பெரும் நிறுவனங்களோடு கைக்கோர்த்த நடிகை அனுஷ்கா சர்மா… 400 கோடிக்கு முதலீடு!

பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்துவரும் நடிகை அனுஷ்கா

நடிகர் அக்சய் குமார் புதிதாக வாங்கியிருக்கும் சொகுசு வீடு… அப்படியென்ன ஸ்பெஷல்?

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம்வரும் நடிகர் அக்சய் குமார்