பிரபல இயக்குனரின் தாயார் இன்று காலமானார்.....!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல பாடகியான கல்யாணி மேனன் இன்று காலை சென்னையில் காலமானார்.
முன்னணி இயக்குனர் மற்றும் பிரபல ஒளிப்பதிவாளரான ராஜீவ் மேனனின் தாயார் தான் கல்யாணி மேனன்.இவருக்கு 80 வயது நிறைவடைந்த நிலையில், உடல்நலக்குறைப்பாடு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் சிகிச்சை பலனின்றி இன்று மதியம் 12 மணியளவில் அவர் உயிரிழந்தார். இவருக்கு இறுதிச்சடங்குகள் நாளை பிற்பகல் 2 மணிக்கு, பெசன்ட் நகரில் நடைபெறவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. கல்யாணிக்கு கருணாகரன் மேனன் என்ற மற்றுமொரு மகனும் உள்ளார்
ராஜீவ் மேனன்:
இயக்குனர் மணிரத்னம் அவர்களின் பம்பாய், குரு, கடல் உள்ளிட்ட திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து பிரபலமானவர் தான் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன். இவர் இயக்குனராக மின்சாரக் கனவு, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், சர்வம் தாளமயம் உள்ளிட்ட ஒருசில ஹிட் படங்களையும் தமிழ் சினிமாவிற்கு கொடுத்துள்ளார்.
ராஜீவ் மேனனின் தாயார் கல்யாணி, தமிழ் சினிமாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களான எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் உள்ளிட்டோரின் இசையில், பல பாடல்களை பாடியுள்ளார்.
நீ வருவாய் என, குலுவாளிலே முத்து வந்தல்லோ, ஓ மணப்பெண்ணே, காதலே காதலே போன்ற தமிழ் பாடல்களையும், மலையாளத்தில் 100-க்கும் அதிகமான படங்களில் பாடல்களை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Bala Vignesh
Contact at support@indiaglitz.com