ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் கலக்கப் போகும் தென்னிந்தியப் படங்கள்!
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரசித்திப் பெற்ற ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழா 2021, இன்று முதல் துவங்கி வரும் ஜுன் 20 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த விழாவில் நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியான “சூரரை போற்று” திரைப்படம் திரையிடுவதற்கு முன்னமே தேர்வாகியது.
தற்போது அறிமுக இயக்குநர் வினோத்ராஜ் இயக்கத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகி ஏற்கனவே பல சர்வதேச திரைப்பட விருதுகளைப் பெற்று இருக்கும் “கூழாங்கல்” திரைப்படம் ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி உள்ளது. இந்தப் படத்தின் வெளியீட்டு உரிமையை லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் அவரது காதலர் விக்னேஷ் சிவன் இருவரும் வாங்கி, ரவுடி பிக்சஸ் சார்பில் வெளியிட்டு உள்ளனர். மேலும் நயன்தாராவும் “கூழாங்கல்“ திரைப்படத்தில் நடித்துள்ளார்.
“கூழாங்கல்” திரைப்படம் ஏற்கனவே நெதர்லாந்தில் நடந்த ரோட்டர்டம் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு புலி விருதுக்கான போட்டி பட்டியலில் கலந்து கொண்டு பரிசு பெற்றது. அதோடு நியூயார்க்கில் நடந்த டைரக்டர்ஸ் நியூ திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு சிறந்த திரைப்படத்திற்கான விருதினைத் தட்டிச் சென்றது. மேலும் மோலோடிஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி திரையிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்த இரு படங்களைத் தவிர “தி கிரேட் இந்தியன் கிச்சன்“ எனும் மலையாளத் திரைப்படமும் ஷாங்காய் திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி உள்ளது. இயக்குநர் ஜியோ பேபி இயக்கிய இந்தத் திரைப்படம் விமர்சன ரீதியாக ரசிகர்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குடும்பம் எனும் அமைப்பு எப்படி பெண்களின் உழைப்பை சுரண்டுகிறது என்பதை காட்சிப்படுத்தி இருக்கும் இந்தத் திரைப்படம் பெண்களின் வாழ்வியல் சிக்கலையும் மிக நுணுக்கமாக எடுத்துக் காட்டி இருந்தது.
கருத்தியல் ரீதியாக பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்திவிட்ட “தி கிரேட் இந்தியன் கிச்சன்” திரைப்படம் தற்போது தமிழில் ரீமேக் செய்யப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. மலையாளத்தில் நிமிஷா சஜயன் நடித்த கதாபாத்திரத்தில் தற்போது நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வருகிறார். கூடவே ராகுல் ரவீந்திரன், யோகி பாபு ஆகியோர் நடிக்க இந்தத் திரைப்படத்தை இயக்குநர் கண்ணன் உருவாக்கி வருகிறார்.
இப்படி நடிகர் சூர்யாவின் “சூரரைப் போற்று”, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் “கூழாங்கல்” மற்றும் “தி கிரேட் இந்தியன் கிச்சன்” என்ற 3 தென்னிந்தியத் திரைப்படங்களும் ஷாங்காய் சர்வதேசத் திரைப்பட விழாவில் திரையிடப்பட இருக்கிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Nithya Ramesh
Contact at support@indiaglitz.com