தேர்தல் தேதி அறிவிப்பு எதிரொலி: தென்னிந்திய படங்களுக்கு 2 மாதங்களுக்கு சிக்கல் தான்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தேர்தல் தேதி அறிவிப்பு காரணமாக தமிழ் படங்கள் மட்டுமின்றி தென்னிந்திய படங்களுக்கு இரண்டு மாதங்கள் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பாராளுமன்ற தேர்தல் தேதி நேற்று அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 14ஆம் தேதி பெரிய நடிகர்களின் பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகி வரும் நிலையில் தேர்தலுக்கு நான்கு நாட்களுக்கு முன் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினம் ஏப்ரல் 14 வருவதால் இந்த ஆண்டு தமிழ் புத்தாண்டு தினத்தில் பெரிய திரைப்படங்கள் ரிலீஸ் ஆக வாய்ப்பே இல்லை என்று தான் கூறப்படுகிறது.
அதுமட்டுமின்றி பெரிய நடிகர்களின் படங்கள் தற்போது பான் இந்திய திரைப்படமாகவும் குறைந்தபட்சம் தென்னிந்தியா முழுவதும் ரிலீஸ் ஆகும் படங்களாக வருவதால் தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களின் தேர்தல் தேதியையும் கணக்கிட்டு தான் படங்களை ரிலீஸ் செய்ய வேண்டிய நிலை உள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடந்தாலும், ஏப்ரல் 26 ஆம் தேதி கேரளாவிலும், ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி கர்நாடகாவிலும், மே 13ஆம் தேதி ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களிலும் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே 19 முதல் மே 13 வரை தென்னிந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் நடைபெற இருக்கும் காரணத்தினால் தென்னிந்தியாவின் மாஸ் நடிகர்களின் படங்கள் இந்த தேதிகளில் வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது .
மே 13ஆம் தேதி தேர்தல் முடிந்த பின்னரே கமல்ஹாசனின் ’இந்தியன் 2’, ‘கல்கி 2898ஏடி, பா. ரஞ்சித்தின் ‘தங்கலான்’ தனுஷின் ’ராயன்’ உள்பட ஒரு சில பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் செய்து குறித்து முடிவு செய்யப்படும் என்று கூறப்படுகிறது. ஏனெனில் மேற்கண்ட படங்கள் அனைத்துமே தமிழகத்தில் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் ரிலீஸ் ஆவதால் மற்ற மாநிலங்களிலும் தேர்தல் முடிந்த பின்னரே பெரிய பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments