100 கோடிக்கும் மேல் சொத்து வைத்திருக்கும் தென்னிந்திய நடிகைகள்: யார் டாப் தெரியுமா?

தமிழ் உள்பட தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கும் நடிகர்கள் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்குகிறார்கள் என்பதும் ரஜினிகாந்த், விஜய், அஜித் போன்றவர்களின் சம்பளம் நூறு கோடி என்றும் கூறப்பட்டு வருகிறது. அதேபோல் மகேஷ்பாபு, சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் போன்றவர்களின் சம்பளமும் மிக அதிகம்.

ஆனால் அதே நேரத்தில் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகைகள் மிகவும் குறைவாகவே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தென்னிந்திய திரையுலகை பொறுத்தவரை நயன்தாரா, தமன்னா, அனுஷ்கா, ராஷ்மிகா மந்தனா, பூஜா ஹெக்டே உள்பட ஒரு சிலர் மட்டுமே கோடிகளில் சம்பளம் வாங்கி வருகின்றனர். இந்த நிலையில் நூறு கோடிக்கும் அதிகமாக சொத்து வைத்துள்ள நடிகைகளின் பட்டியல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா 165 கோடி ரூபாய் சொத்து வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இவர் கடந்த 19 ஆண்டுகளாக திரையுலகில் உள்ளார் என்பதும் தற்போது இவர் சுமார் 5 கோடி முதல் 8 கோடி வரை ஒரு படத்திற்கு சம்பளம் வாங்குவதாகவும் கூறப்படுகிறது.

நயன்தாராவை அடுத்து தமன்னா 110 கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளிலும் பாலிவுட்டிலும் நடித்து வரும் தமன்னாவுக்கு ஒரு திரைப்படத்திற்கு 3 கோடி சம்பளம் என்று கூறப்படுகிறது.

’பாகுபலி’ உள்பட பல சூப்பர்ஹிட் திரைப்படங்களில் நடித்த முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்காவின் சொத்து மதிப்பு சுமார் 100 கோடி என்று தகவல் வெளியாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்குவதாகவும் தெரிகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவரான சமந்தாவும் கோடீஸ்வர நடிகைகள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு 89 கோடி என்று கூறப்படுகிறது. வெகுவிரைவில் இவர் ரூ.100 கோடி சொத்து வைத்திருக்கும் நடிகைகள் பட்டியலில் இடம் பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. திருமணமாகி விவாகரத்து பெற்ற பின்னரும் தமிழ் தெலுங்கு திரையுலகில் பிஸியாக இருக்கும் நடிகையான சமந்தா ஒரு திரைப்படத்திற்கு 3 முதல் 5 கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தெரிகிறது.

கோடீஸ்வரர் பட்டியலில் இடம்பெற்றுள்ள நடிகைகளில் பூஜா ஹெக்டே மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகிய இருவரும் உள்ளனர். பூகா ஹெக்டேவின் சொத்து மதிப்பு 50 கோடி ரூபாய் என்றும், ராஷ்மிகா மந்தனாவின் சொத்து மதிப்பு ரூ.28 கோடி என்றும் கூறப்படுகிறது. இருவருமே தற்போது தமிழ் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மருத்துவமனயில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனவுடன் வீடியோ வெளியிட்டாரா விக்ரம்?

நடிகர் சியான் விக்ரம் சமீபத்தில் உடல் நலக்குறைவு காரணமாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு மாரடைப்பு

கீர்த்தி சுரேஷ் இவ்வளவு அழகாக பாடுவாரா? வைரல் வீடியோ

தமிழ், தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் பாடும் வீடியோ இணையதளங்களில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள், 'இவ்வளவு அழகாக கீர்த்தி சுரேஷ் பாடுவாரா

சூர்யா-ஜோதிகா, விஜய்சேதுபதி-ஜெஸ்ஸி: விக்கி-நயனின் கலக்கல் திருமண புகைப்படங்கள்!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கடந்த மாதம் 9 ஆம் தேதி இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார் என்பதும், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் நேரில் கலந்துகொண்டு

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட பிரபுதேவா மகன்: மறைந்த நடிகரிடம் ஆசி வாங்கும் புகைப்படம் வைரல்!

தோளுக்கு மேல் வளர்ந்துவிட்ட பிரபுதேவாவின் மகன் மறைந்த நகைச்சுவை நடிகரிடம் ஆசி வாங்கிய புகைப்படத்தை பிரபுதேவா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து 'உங்களை மிஸ் செய்கிறேன்

3 கண்டங்கள், 4 நகரங்கள்: நீண்ட சுற்றுப்பயணம் கிளம்பிய விஜய் பட நாயகி!

தளபதி விஜய் படத்தில் நாயகியாக நடித்த நடிகை மூன்று கண்டங்கள் மற்றும் நான்கு நகரங்களுக்கு சுற்றுப்பயணம் செய்ய இருப்பதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளார்.