அதிபருக்கு 15 மாதம் சிறை தண்டனை? அதிர்ச்சி சம்பவம்!

  • IndiaGlitz, [Wednesday,June 30 2021]

நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் அதிபர் ஜேக்கப் ஜுமாவிற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் 15 மாதம் சிறை தண்டனை அளித்து உத்தரவிட்டுள்ளது. தென் ஆப்பிரிக்க வரலாற்றில் முதல் முறையாக ஒரு அதிபருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தென் ஆப்பிரிக்காவின் அதிபராக ஜேக்கப் ஜுமா கடந்த 2009 முதல் 2018 வரை பொறுப்பு வகித்தார். இந்த காலக்கட்டத்தில் தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி ஊழல் செய்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்தக் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம் விசாரணை நடத்தி வந்தது. மேலும் இதுகுறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கமாறு ஜேக்கப் ஜுமாவிற்கு பலமுறை நோட்டீஸ் அனுப்பட்டது. ஆனால் அவர் இந்த சம்மனுக்கு அவர் பதில் அளிக்காததால் தற்போது உச்சநீதிமன்றத்தை அவமதித்த குற்றத்திற்காக அவருக்கு 15 மாதம் சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளது.

இந்த உத்தரவைத் தொடர்ந்து ஜேக்கப் ஜுமா தனது சொந்த ஊரான நகண்டலா ஜோகன்னஸ்பர்க்கில் சரண் அடையவும் நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. தென் ஆப்பிரிக்க வரலாற்றில் முதல் முறையாக முன்னாள் அதிபர் ஒருவருக்கு சிறை தண்டனை வழங்கப்பட்டு உள்ளதால் இந்தச் சம்பவம் குறித்து அந்நாட்டு மக்கள் அதிர்ச்சி வெளியிட்டு வருகின்றனர்.

More News

தடுப்பூசி தட்டுப்பாட்டை அடுத்து அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்திற்கு தற்போது மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 21/2 லட்சம் கொரோனா தடுப்பூசிகள் வந்துள்ளதாகவும்

அசுர வேகத்தில் உடல் எடையை குறைக்க உதவும் ஸ்கிப்பிங் விளையாட்டு? எளிய டிப்ஸ்!

சிறிய வயதில் கையில் கிடைக்கும் கயிறுகளை வைத்துக் கொண்டு ஸ்கிப்பிங் விளையாடி இருப்போம்.

பா ரஞ்சித்தின் 'சார்பாட்டா பரம்பரை' ரிலீஸ் குறித்த தகவல்: ரசிகர்கள் அதிருப்தி!

ஆர்யா நடிப்பில் இயக்குனர் பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள 'சார்பாட்டா பரம்பரை' திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி ஒரு சில மாதங்கள் ஆன நிலையில் விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும்

ரோஜாக்களின் காதலன்....! ஆணழகன் அரவிந்த் சாமிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!

90-களில் பெண்களின் கனவு நாயகன், ஆண் மக்களே பொறாமைப்படும் அளவிற்கு அழகுற இருக்கும் ஆணழகன்,

ஷங்கரின் 'இந்தியன் 2' வழக்கு: சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில், கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் 'இந்தியன் 2' பட பிரச்சனை நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம்