காதலருக்கு ஒட்டகச் சிவிங்கியைக் கொன்று அதன் இதயத்தை பரிசளித்த காதலி!
- IndiaGlitz, [Wednesday,February 24 2021]
தென் ஆப்பிரிக்காவில் இளம்பெண் ஒருவர் ஒட்டகச்சிவிங்கியை வேட்டையாடி கொன்று அதன் இதயத்தை தனியாக எடுத்து தன் காதலருக்குப் பரிசளித்து உள்ளார். அதைப் பெருமையாகத் தன்னுடைய டிவிட்டரிலும் தெரிவித்து இருக்கிறார். இதனால் விலங்கு நல ஆர்வலர்கள் பலரும் இந்நிகழ்வுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
தென் ஆப்பிரிக்காவின் வடக்கு பகுதியில் உள்ள லிம்போபோ எனும் மாகாணத்தில் வசித்து வரும் 32 வயது இளம்பெண் மெரலைன் வான் டெர் மேர்வே. இவர் தன்னுடைய 5 வயதில் இருந்தே விலங்குகளை வேட்டியாடி வருகிறார். இதுவரை தன்னுடைய வேட்டைத் திறமையால் 500 விலங்குகளைக் கொன்று குவித்ததாகவும் பெருமையோடு டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து கொண்டுள்ளார்.
இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு வான் டெரின் காதலர் ஹெகார்டர் 1500 டாலர் செலுத்தி இவருக்கு வேட்டையாடுவதற்கான லைசென்ஸை பெற்றுத் தந்துள்ளார். இதனால் குளிர்ந்து போன வான் டெர் முதல் முறையாக ஒரு ஒட்டகசிவிங்கியை கொன்று அதன் இதயத்தை தனியாக எடுத்து காதலருக்கு பரிசாகக் கொடுத்து அசத்தி இருக்கிறார். இந்நிகழ்வு வேட்டையில் ஆர்வம் கொண்ட வான் டெருக்கு ஒருவகையில் சந்தோஷத்தை கொடுத்து இருந்தாலும் விலங்கு நல ஆர்வலர் மற்றும் சமூக நல ஆர்வலருக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் வான் டெருக்கு தொடர்ந்து கண்டனங்கள் குவிந்து வருகின்றன.
This is just disgusting. #BanTrophyHunting https://t.co/ZwkfDmoojJ
— julie Ⓥ (@jmcappiello) February 23, 2021