கொரோனா வைரஸ் எதிரொலி: ஓரின திருமணத்தை ஒத்திவைத்த கிரிக்கெட் வீராங்கனை

தென்னாப்பிரிக்க கிரிக்கெட் வீராங்கனை ஒருவர் தனது தோழியை காதலித்து வந்த நிலையில் இந்த ஓரினத் திருமணம் ஏப்ரல் 10-ஆம் தேதி நடைபெற திட்டமிட்டு இருந்தது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்த திருமணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வீராங்கனை லிசஸ் லீ என்பவர் தனது தோழி தன்ஜா குரோனியே என்பவரை கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்ய முடிவு செய்து அவர்களது பெற்றோர்களிடம் ஒப்புதல் கேட்டனர். தென்னாப்பிரிக்காவில் ஓரின திருமணம் கடந்த 2006ஆம் ஆண்டே அங்கீகரிக்கப்பட்டதால் அவரது பெற்றோர்கள் இந்த திருமணத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.

இதனை அடுத்து ஏப்ரல் 10ம் தேதி இந்த ஓரினத் திருமணம் தென் ஆப்பிரிக்காவில் நடைபெற இருந்தது. ஆனால் தற்போது உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருவதை அடுத்து இந்த திருமணத்தை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக லிசஸ் லீ தெரிவித்துள்ளார். புதிய திருமண தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தென்ஆப்பிரிக்க மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள 28 வயதில் லிசஸ் லீ, தென் ஆப்பிரிக்க அணிக்காக ஒரு டெஸ்ட், 82 ஒருநாள் போட்டி மற்றும் 74 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.