ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்த நீதிமன்றம்: வினோத வழக்கு
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகெங்கும் பல வினோதமான வழக்குகள் நீதிமன்றத்தில் நடந்து வருவதை அவ்வப்போது பார்த்து வருகிறோம். குறிப்பாக விலங்குகள் மேல் சில வழக்குகள் பதிவு செய்யப்படும் போது அந்த வழக்குகள் முற்றிலும் வித்தியாசமானதாக இருக்கும்.
அந்த வகையில் தென்னாப்பிரிக்காவில் ஆடு மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு அந்த ஆட்டுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த ரூம்பேக் கிழக்கு என்ற பகுதியில் அடியு சாப்பிங் என்ற பெண் நடந்து சென்று கொண்டிருந்தபோது செம்மரி ஆடு ஒன்று வேகமாக பின்னால் அந்த பெண்ணை முட்டியது. அதனால் நிலைகுலைந்து கீழே விழுந்த அந்த பெண்ணை மீண்டும் மீண்டும் மார்பு பகுதியில் ஆடு முட்டியது. இதனைஅடுத்து அந்த பெண்ணின் மார்பு எலும்கள் முறிந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.
இதனை அடுத்து ஆட்டுக்கு எதிராக போலீசில் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து அந்த ஆட்டை போலீசார் பிடித்து காவல்நிலையத்தில் கட்டி வைத்தனர். இந்த வழக்கு சில மாதங்களாக நடந்து வந்த நிலையில், வழக்கு விசாரணையின்போது அந்தப் பெண்ணை ஆடு அடித்துக் கொன்றதை அங்குள்ள மக்கள் நேரில் பார்த்ததாக சாட்சி கூறினார்கள். இதனை அடுத்து ஆடு குற்றவாளி என உறுதி செய்யப்பட்டு அந்த ஆட்டுக்கு 3 ஆண்டு சிறை தண்டனை கொடுக்கப்பட்டது. தற்போது அந்த ஆடு சூடான் லேக் மாநில ராணுவ சிறையில் அடைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout