மதுரை அன்பு மீதான வழக்கு அவ்வளவுதானா?
Send us your feedback to audioarticles@vaarta.com
பிரபல இயக்குனர், நடிகர் சசிகுமார் உறவினர் அசோக்குமார் தற்கொலைக்கு காரணமானவர் என்று கூறப்பட்ட மதுரையை சேர்ந்த பைனான்சியர் அன்புச்செல்வனை பிடிக்க கடந்த சில நாட்களுக்கு முன்னர் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை ஐதராபாத் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் அன்புவை தேடி பின்னர் வெறுங்கையுடன் திரும்பி வந்தது.
இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தல் உள்பட பல பரப்பான செய்திகளால் இந்த விஷயமே மக்களுக்கு மறந்துபோய்விட்ட நிலையில் இன்று மதுரை அன்பு அவரது அலுவலகத்திற்கு வந்து தனது வழக்கமான பணிகளை கவனித்து வருவதாக கூறப்படுகிறது
நீதிமன்றம் அவர் மீது எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் அவர் மீது எந்த நடவடிக்கையும் இனி எடுக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Contact at support@indiaglitz.com
Comments