டிராவிட் பயிற்சியாளர் ஆனதற்கு இதுதான் காரணம்… உண்மையை உடைத்த கங்குலி!

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக தி லெஜெண்ட் கிரிக்கெட்டர் ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டு உள்ளார். இதற்கு காரணம் டிராவிட்டின் மகன்தான் என்று பிசிசிஐயின் தலைவர் கங்குலி நகைச்சுவையாகத் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ரவிசாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியுடன் முடிவடைந்ததுள்ளது. இதையடுத்து நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடர் போட்டி முதல் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிவரை இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட் செயல்படுவார்.

இந்திய அணிக்காக விளையாடிய ராகுல் டிராவிட் பல போட்டிகளில் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்துள்ளார். தற்போது அண்டர் 19, இந்திய ஏ அணிக்கான பயிற்சியாளராக இருந்து இளம் வீரர்களை வழிநடத்தி வருகிறார். மேலும் இந்திய கிரிக்கெட் அணிக்கு பல சிறந்த வீரர்களை உருவாக்கிக் கொடுத்துள்ளார். மேலும் தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பணியாற்றி வருகிறார்.

இந்நிலையில் தற்போது இந்தியக் கிரிக்கெட் அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்டு உள்ளார். இந்தத் தேர்வுக்கு உண்மையான காரணம், டிராவிட்டின் மகன்தான் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

டிராவிட்டின் மகன் தனக்கு போன் செய்ததாகவும் வீட்டில் அப்பா மிகவும் கண்டிப்பாக இருக்கிறார் எனக் கூறியதாகவும் தெரிவித்த பிசிசிஐயின் தலைவர் கங்குலி, “நான் உடனே டிராவிட்டுக்கு போன் செய்து நீங்கள் இந்திய அணியுடன் இணைய வேண்டிய நேரம் வந்துவிட்டது“ எனக் கூறிவிட்டேன் என்று பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். இந்தக் கருத்தைக் கேட்ட ரசிகர்கள், இந்திய வீரர்கர்களுக்கும் இதே கண்டிப்புதானா? எனக் கேள்வி எழுப்பி வருவதும் குறிப்பிடத்தக்கது.