பிசிசிஐ தலைவர் சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதி!

முன்னாள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனும் தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளதால் கிரிக்கெட் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். 

பிசிசிஐ தலைவராக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டவர் சௌரவ் கங்குலி என்பது தெரிந்ததே. இந்த நிலையில் சற்று முன்னர் சௌரவ் கங்குலி அவர்களுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் இதனை அடுத்து கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. சௌரவ் கங்குலி உடல்நிலை குறித்த தகவலை விரைவில் மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை ஒன்றின் மூலம் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனை அடுத்து சவுரவ் கங்குலியின் கோடிக்கணக்கான ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சௌரவ் கங்குலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தகவல், கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

More News

தமிழக காங்கிரஸில் முக்கிய பதவியை பெற்ற தமிழ் நடிகர்!

கடந்த சில மாதங்களாக பல திரையுலக பிரமுகர்கள் பாஜகவிற்கு சென்று கொண்டிருக்கும் நிலையில் தற்போது தமிழ் நடிகர் ஒருவருக்கு காங்கிரஸ் கட்சியில் முக்கிய பதவி கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது

ஆஸ்திரேலியாவில் தளபதி விஜய்யின் 'மாஸ்டர்' செய்த சாதனை!

தளபதி விஜய் நடித்த 'மாஸ்டர்' திரைப்படம் வரும் 13ஆம் தேதி தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது என்பதும் என்றும் தமிழ், தெலுங்கு, கன்னடம் மட்டுமின்றி

எனக்கு எதிராக தேர்தலில் போட்டியிட தயாரா? உதயநிதிக்கு சவால்விட்ட நடிகை!

வரும் சட்டமன்ற தேர்தலில் என்னை எதிர்த்து போட்டியிட தயாரா என நடிகரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதிக்கு சவால் விட்ட நடிகை ஒருவரால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

தமிழக முதல்வரிடம் 'வலிமை' அப்டேட்' கேட்ட அஜித் ரசிகர்: வைரல் வீடியோ!

தேர்தல் பிரச்சாரத்திற்காக வரும் அரசியல்வாதிகளிடமும் ஒருசிலர் கேட்கும் கேள்விகள் காமெடியானதாக இருக்கும் என்பதும் இதுகுறித்த வீடியோக்கள் வைரலாகி வருகிறது

வானத்தைத் நோக்கி சரமாரி துப்பாக்கிச்சூடு… போர்க்களமாக மாறிய புத்தாண்டு கொண்டாட்டம்… அதிர்ச்சி வீடியோ!!!

கடந்த 2019 டிசம்பர் மாத இறுதியில் ஆரம்பித்த கொரோனா பரவல் இன்றுவரை தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது