8 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில்.... செளந்தர்யா ரஜினிகாந்த் நெகிழ்ச்சி

  • IndiaGlitz, [Saturday,July 13 2019]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த கடந்த 2011ஆம் ஆண்டு உடல்நலக்குறைவு காரணமாக சிங்கப்பூர் சென்று சிகிச்சை எடுத்து கொண்டார். அவரது உடல்நிலை ஒரு கட்டத்தில் அபாய கட்டத்தில் இருப்பதாக தகவல்கள் வெளிவந்ததும் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அனைத்து மத வழிபாட்டு இல்லங்களில் ரசிகர்கள் பிரார்த்தனை செய்தனர். ரசிகர்களின் பிரார்த்தனையால் ரஜினிகாந்த் உடல்நலம் பெற்று நாடு திரும்பினார்.

இந்த நிலையில் சிங்கபூரில் இருந்து சிகிச்சையை முடித்துவிட்டு ரஜினிகாந்த் நாடு திரும்பிய தினம் இதே ஜூலை 13 என்பதை அவரது மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் ஞாபகப்படுத்தியுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து நானும் அப்பாவும் சென்னைக்கு திரும்பி வந்தபோது ரசிகர்களின் கரகோஷத்தை என்னால் மறக்கவே முடியாது. அப்பா, நீங்கள் உண்மையில் கடவுளின் குழந்தை என்று செளந்தர்யா குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவையும் அவர் பதிவு செய்துள்ளார்.