'எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் ரஜினி இல்லை, இவர் தான்': செளந்தர்யா ரஜினிகாந்த் டுவிட்!
Send us your feedback to audioarticles@vaarta.com
உலகமே சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினிகாந்த் என்று கூறிவரும் நிலையில் எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் லதா ரஜினிகாந்த் தான் என செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் திரையுலகில் நுழைந்து 47 வருடங்கள் ஆகிவிட்டன. கடந்த 1975ஆம் ஆண்டு கே பாலச்சந்தர் இயக்கிய ’அபூர்வ ராகங்கள்’ என்ற திரைப்படத்தில் ரஜினி காந்த் அறிமுகம் ஆன நிலையில் அந்த திரைப்படம் வெளியாகி நேற்றுடன் 47 வருடங்கள் நிறைவு பெற்றுவிட்டது.
இதனை அடுத்து ரஜினியின் 47 வருட திரையுலக கொண்டாட்டத்தை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சமூக வலைத்தளத்தில் இதுகுறித்து ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை ஏற்கனவே ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் சௌந்தர்யா ரஜினிகாந்த் ஆகிய இருவரும் தங்கள் தந்தைக்கு வாழ்த்து கூறிய டுவிட்டுக்களை பார்த்தோம்.
இந்த நிலையில் ரஜினிகாந்த் தனது மனைவி லதாவுடன் வீட்டில் 47 ஆண்டு திரையுலக வாழ்க்கையை கொண்டாடியதன் புகைப்படத்தை செளந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்த் இருக்கும் இந்த புகைப்படத்தில் எங்கள் லவ்லி ஜில்லும்மா’, அப்பாவின் மிகப்பெரிய ரசிகை மற்றும் எங்கள் வீட்டு சூப்பர் ஸ்டார் லதா ரஜினிகாந்த்’ என்று குறிப்பிட்டு உள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.
Our lovely Jilluma .. Appa’s greatest fan and the superstar of our family ????????☺️☺️?????? @OfficialLathaRK @rajinikanth @ash_rajinikanth pic.twitter.com/ccxVeoWRMW
— soundarya rajnikanth (@soundaryaarajni) August 16, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com