'பொன்னியின் செல்வன்' பணியை ஆரம்பித்த ரஜினியின் மகள்!

  • IndiaGlitz, [Friday,June 21 2019]

அமரர் கல்கி எழுதிய வரலாற்று நாவலான 'பொன்னியின் செல்வன்' கதையை ஒருபக்கம் இயக்குனர் மணிரத்னம் திரைப்படமாக எடுக்க முயற்சித்து வருகிறார் என்பது தெரிந்ததே. இந்த படத்தில் வந்தியத்தேவனாக கார்த்தி, குந்தவையாக கீர்த்தி சுரேஷ், பூங்குழலியாக நயன்தாரா, சுந்தரசோழனாக அமிதாப்பச்சன், ஆதித்த கரிகாலனாக விக்ரம், நந்தினியாக ஐஸ்வர்யாராய், அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' நாவலை வெப் சீரிஸ் வடிவில் தயார் செய்ய சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் முயற்சித்து வருகிறார் என்று வெளிவந்த செய்தியை ஏற்கனவே பார்த்தோம். உலக அளவில் பிரபலமான எம்.எக்ஸ் பிளேயர் என்ற நிறுவனத்துடன் இணைந்து வெப் சீரிஸ் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் செளந்தர்யா ரஜினிகாந்த் தற்போது இதுகுறித்த பணிகளை தொடங்கிவிட்டதாகவும், இதுகுறித்த அப்டேட்டுக்களை அவ்வப்போது வெளியிடவுள்ளதாகவும் தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படங்களுடன் பதிவு செய்துள்ளார்.

ஏற்கனவே 'கோச்சடையான்' என்ற சரித்திர படத்தை இயக்கிய அனுபவம் உள்ள செளந்தர்யா, 'பொன்னியின் செல்வன்' வெப் சீரிஸையும் சிறப்பாக உருவாக்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More News

இதுதான் விஜய் பட டைட்டிலா? இணையத்தில் வைரலாகும் போஸ்டர்!

தளபதி விஜய் நடித்து வரும் 63வது படமான 'தளபதி 63 படத்தின் ஃபர்ஸ்ட்லுக் இன்று மாலை 6 மணிக்கும் நாளை அதிகாலை 12 மணிக்கும் செகண்ட் லுக்கும் வெளிவரவுள்ள நிலையில்

'விவிவி' கூட்டணிக்கு வாழ்த்து தெரிவித்த வரலட்சுமி

விஜய்சேதுபதி கதை வசனம் எழுதும் ஒரு படத்தில் விஷ்ணுவிஷால், விக்ராந்த் நடிக்கவுள்ளதாகவும், இந்த படத்தில் யுவன்ஷங்கர் இசையமைப்பாளராக இணைந்துள்ளதாகவும்

தேர்தலை நிறுத்த பதிவாளருக்கு அதிகாரம் உள்ளதா? ஐகோர்ட்டில் விஷால் மனு!

நடிகர் சங்க தேர்தல் வரும் 23ஆம் தேதி நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் நேற்று மாலை திடீரென நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்படுவதாக பதிவாளர் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்தார்.

விஷ்ணுவிஷால்-விக்ராந்த் படத்தில் இணைந்த பிரபலம்!

விஷ்ணு விஷாலின் அடுத்த படத்தில் விக்ராந்த் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார் என்பதையும் இந்த படத்தை சஞ்சீவி என்பவர் இயக்கவுள்ளார்

சென்னையின் தண்ணீர் பிரச்சனையை தீர்க்கும் கேரள முதல்வர்!

சென்னையில் கடந்த ஆறு மாதங்களாக மழை பெய்யவில்லை என்பதால் சென்னைக்கு குடிநீர் தரும் அனைத்து ஏரிகள் உள்பட நீர்நிலைகள் வறண்டுவிட்டது.