close
Choose your channels

மீண்டும் திரையுலகில் களமிறங்கிய செளந்தர்யா ரஜினிகாந்த்.. ஹீரோ, டைட்டில் அறிவிப்பு..!

Wednesday, September 6, 2023 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் மீண்டும் திரையுலகில் களமிறங்கியுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கங்களில் வைரல் ஆகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’கோச்சடையான்’ என்ற திரைப்படத்தை இயக்கிய சௌந்தர்யா ரஜினிகாந்த் அதன் பின்னர் தனுஷ் நடித்த ’வேலையில்லா பட்டதாரி 2’ படத்தை இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது அவர் ’கேங்க்ஸ் ’ என்ற வெப் தொடரை தயாரிக்க உள்ளதாக அறிவித்துள்ளார். நெள ஆபிரகாம் என்பவர் இந்த வெப்தொடரை இயக்க உள்ளார். இந்த வெப் தொடரின் நாயகனாக சமீபத்தில் சூப்பர் ஹிட்டான ‘போர் தொழில்’ படத்தில் நடித்த அசோக் செல்வன் நடிக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது

மேலும் இந்த வெப் தொடரின் பூஜை இன்று நடந்த நிலையில் பூஜை குறித்த புகைப்படங்களை செளந்தர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த வெப் தொடர் குறித்த விவரங்களை விரைவில் அறிவிக்க இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அமேசான் பிரைம் ஓடிடியில் இந்த வெப் தொடர் விரைவில் ரிலீஸ் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment