தமிழக முதல்வரை சந்தித்த செளந்தர்யா ரஜினிகாந்த்: என்ன காரணம்?

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் சற்று முன் சந்தித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த், சமீபத்தில் 'Hoote' என்ற செயலியை அறிமுகம் செய்து வைத்தார். வித்தியாசமான சமூக வலைதளங்களில் ஒன்றான 'Hoote' என்ற சமூக வலைதளம் குரல்வழி மூலம் கருத்துக்களை பகிரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது என்பதும், ரஜினிகாந்த் இந்த செயலியை தனது ட்விட்டர் பக்கத்தில் அறிமுகம் செய்து வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களை சௌந்தர்யா ரஜினிகாந்த் சந்தித்து 'Hoote' செயலி பற்றி விவரித்து அவருடைய வாழ்த்துக்களை பெற்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ' Hoote’ App.ஐ பற்றி விவரித்து , அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்