சௌந்தர்யா ரஜினியின் புதிய வெப் தொடர்.. ஹீரோ, ஹீரோயினை அறிவித்த அமேசான் ப்ரைம்..!

  • IndiaGlitz, [Tuesday,March 19 2024]

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் உருவான வெப் தொடர் ஒன்றை விரைவில் ஒளிபரப்பாக இருப்பதாக அமேசான் பிரைம் அறிவித்துள்ள நிலையில் இந்த அறிவிப்பு தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிப்பில் ஒரு வெப் தொடர் உருவாகி வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியான நிலையில் தற்போது இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்த வெப் தொடருக்கு கேங்க்ஸ் குருதிப் புனல்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வெப் தொடரில் சத்யராஜ், நாசர், அசோக் செல்வன், நிமிஷா சஞ்சயன், ரித்திகா உள்ளிட்டோர் நடித்துள்ளதாகவும் இந்த வெப் தொடரை நோவா என்பவர் இயக்கி இருப்பதாகவும் அமேசான் பிரைம் தனது சமூக வலைத்தளத்தில் அறிவித்துள்ளது.

மேலும் இந்த வெப் தொடரில் அரசியல்வாதிகள், திரையுலக பிரபலங்கள், வியாபாரிகள், கடத்தல்காரர்கள் ஆகிய கேரக்டர்கள் இருப்பதாகவும் கடந்த 70களின் பின்னணியில் நடக்கும் இரண்டு கேங்ஸ்டர்களுக்கு இடையிலான மோதல் தான் இந்த வெப் தொடர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அழுத்தமான கதையம்சம் கொண்ட இந்த தொடர் விரைவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் இந்த வெப் தொடருக்காக காத்திருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

நடிகை சமந்தாவின் அடுத்த புரொஜக்ட்.. அட்டகாசமான டைட்டில் போஸ்டர்..!

நடிகை சமந்தா உடல் நலக்குறைவு காரணமாக கடந்த சில மாதங்களாக திரையுலகில் இருந்து தற்காலிகமாக ஓய்வு எடுத்த நிலையில் தற்போது மீண்டும் அவர் நடிக்க தொடங்கிவிட்டார் என்பதும் படப்பிடிப்பில் கலந்து கொண்டு

விஜய்யின் கடைசி படத்தின் சம்பளம் இத்தனை கோடியா? ஆச்சரியத்தில் இந்திய திரையுலகம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் கடைசி திரைப்படமான 'தளபதி 69' படத்திற்கு அவருக்கு பேசப்பட்டிருக்கும் சம்பளம் குறித்த தகவல் வெளியாகி இருக்கும் நிலையில் இந்த தகவலை கேட்டு இந்திய திரை உலகினர்

'புஷ்பா' படத்தின் 'ஊ சொல்றியா' பாடலை பாடிய பாடகிக்கு விபத்து: மருத்துவமனையில் அனுமதி..!

'புஷ்பா' படத்தின் 'ஊ சொல்றியா' பாடலை பாடிய பாடகி விபத்தில் சிக்கியதை அடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத சாதனையை செய்த 'மஞ்சும்மெல் பாய்ஸ்'.. இதுதான் உண்மையான வெற்றி..!

மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர்களான மம்முட்டி, மோகன்லால் படங்கள் செய்யாத வசூல் சாதனையை ஒரு சின்ன பட்ஜெட் படம் செய்திருப்பதை பார்த்து மலையாள திரை உலக மட்டும் மட்டுமின்றி ஒட்டுமொத்த

இந்திக்கு செல்கிறதா 'அரண்மனை' திரைப்படம்.. சுந்தர் சி உடன் இணையும் பாலிவுட் பிரபலம்..!

தமிழ் திரையுலகின் முன்னணி கமர்ஷியல் இயக்குனரான சுந்தர் சி விரைவில் பாலிவுட்டில் ஒரு படம் இயக்க இருப்பதாகவும் இந்த படம் 'அரண்மனை' படத்தின் ஒரு பாகத்தின் ரிமேக் என்றும் கூறப்படுகிறது.