13 வருடங்களுக்கு பின் கிடைத்த நாற்காலி.. செளந்தர்யா ரஜினிகாந்த் பதிவு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மகள் ஏற்கனவே ’கோச்சடையான்’ மற்றும் ’விஐபி 2’ ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பதும், ‘கோவா’ என்ற படத்தை தயாரித்துள்ளார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் மீண்டும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரையுலகில் செளந்தர்யா ரஜினிகாந்த் களம் இறங்கினார் என்பதை பார்த்தோம். அவர் ’கேங்க்ஸ்’ என்ற வெப் தொடரை தயாரிக்க இருப்பதாக அறிவித்த நிலையில் இந்த வெப் தொடரை நெள ஆபிரகாம் என்பவர் இயக்க உள்ளார்.
சமீபத்தில் திருமணமான நடிகர் அசோக் செல்வன் இந்த வெப் தொடரின் நாயகனாக நடிக்க உள்ளார் என்பதும் இந்த தொடரின் பூஜை சமீபத்தில் நடந்த நிலையில் பூஜை முடிந்த பின் இந்த தொடரின் குழுவினர் ரஜினிகாந்தை சந்தித்து ஆசி பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அமேசான் பிரைம் ஓடிடிக்காக இந்த வெப் தொடர் தயாரிக்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த வெப்தொடரின் படப்பிடிப்பு நேற்று முதல் தொடங்கியுள்ளதாக சௌந்தர்யா ரஜினிகாந்த் அறிவித்துள்ளார்.
13 ஆண்டுகளுக்கு முன்னர் கடந்த 2010 ஆம் ஆண்டு ‘கோவா’ படத்திற்காக தயாரிப்பாளர் நாற்காலியில் உட்கார்ந்தேன். அதன் பிறகு இப்போது தான் மீண்டும் தயாரிப்பாளராக உட்கார்ந்து இருக்கிறேன். முன்பை விட இப்போது தனது அதிக ஐடியாக்கள் கிடைத்துள்ளன. இன்று முதல் கடவுள் மற்றும் முன்னோர்களின் ஆசிர்வாதத்தால் படப்பிடிப்பை தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார். இந்த பதிவு தற்போது வைரல் ஆகி வருகிறது.
Where I truly belong ✨✨✨ !!! On location … on set !!!! 🎥 2010 I produced the movie Goa .. 13 years later .. I’m on the producers chair again 🙂🎞️ Older and surely much more wiser .. 😇 camera has started rolling today 🎥!!! Gods and gurus blessings 🙏🏻⚡️✨ onwards and upwards…
— soundarya rajnikanth (@soundaryaarajni) September 27, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com