1,2,3,4,...5: செளந்தர்யா ரஜினியின் அசத்தல் டுவீட்
Send us your feedback to audioarticles@vaarta.com
சூப்பர் ஸ்டார் ரஜினியின் இரண்டாவது மகளும் இயக்குனருமான செளந்தர்யா சமீபத்தில் நடிகர் விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் செளந்தர்யாவுக்கும் முதல் கணவர் அஸ்வினுக்கும் பிறந்த வேத் என்ற மகன், விசாகனுடன் ஒன்றிப்போனது குறித்த பல பதிவுகளை செளந்தர்யா தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இன்று மகன் வேத் ஐந்தாவது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்றும், 1,2,3,4 என கடந்து ஐந்தாவது பிறந்த நாள் தனது குழந்தைக்கு வந்துள்ளதாகவும், பிறந்த நாளில் மட்டுமின்றி அவனை ஒவ்வொரு நாளும் கொண்டாடி வருவதாகவும், எங்கள் தேவதையை கடவுள் என்றும் ஆசிர்வதிப்பார் என்றும் செளந்தர்யா ரஜினி தனது சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வேத் கேக் வெட்டுவது குறித்தும், செளந்தர்யா மற்றும் விசாகன், மகனுக்கு வாழ்த்து கூறும் புகைப்படத்தையும் செளந்தர்யா வெளியிட்டுள்ளார். வேத் பிறந்த நாளை அடுத்து நடிகை காயத்ரி ரகுராம் உள்ளிட பிரபலங்களும் ரஜினி ரசிகர்களும் சமூக வலைத்தளம் மூலம் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
1...2...3...4 & just like that ❤️❤️❤️ our baby turns 5 ?????? we celebrate you everyday ?????? god bless you our little angel ???? Ved papa !!! #HappyBirthdayVed pic.twitter.com/TzsGXagMgd
— soundarya rajnikanth (@soundaryaarajni) May 6, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com