என்ன செஞ்சாலும் தப்பு சொல்றாங்க.. செளந்தர்யாவை கதறி அழவைத்த பெண்கள் அணி..
- IndiaGlitz, [Monday,October 21 2024]
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக இருக்கும் சௌந்தர்யா, நான் என்ன செய்தாலும் தப்பு தான் சொல்றாங்க என்று பெண்கள் அணியின் மீது குற்றம் சாட்டி கதறியழுத காட்சி, இன்றைய அடுத்த ப்ரோமோ வீடியோவில் உள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில், ஆண்கள் அணி, பெண்கள் அணி என இரண்டு அணிகளாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு வாரமும் ஒரு அணியில் இருந்து இன்னொரு அணிக்கு ஒரே ஒரு போட்டியாளர் செல்ல வேண்டும் என்று விதிமுறை வகுக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில், பெண்கள் அணியில் இருந்த ஒவ்வொருவரும் ஆண்கள் அணிக்கு செல்ல விரும்பப்படும் நிலையில், இந்த வாரம் சாச்சனா ஆண்கள் அணிக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், நான் ஒவ்வொரு வாரமும் ஆண்கள் அணிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பினேன், ஆனால் அதற்கான தகுதி இன்னும் வரவில்லை என்று நினைக்கிறேன் என்று சௌந்தர்யா கூறுகிறார். அதற்கு, தனிப்பட்ட முறையில் தெரிய வேண்டும் என்பதற்காக உன்னை அனுப்ப முடியாது, டீமுக்காக நீ என்ன செய்தாய் என்று ஜாக்குலின் கூற, அப்போ என்ன செய்தால்தான் என்னை அனுப்புவீர்கள்? என்று சௌந்தர்யா கேட்கிறார். அதை நீ தான் சொல்லணும் என்று ஜாக்குலின் கூறுகிறார்.
உன் மீது எங்களுக்கு நம்பிக்கை வந்த பின்னர் கண்டிப்பாக உன்னை அனுப்புவோம் என்று ஆர்ஜே ஆனந்தி கூறுகிறார். அதே போல, அன்சிதாவும் சௌந்தர்யாவை குத்திக் காட்டும் வகையில் பேச, உடனே அழுது கொண்டே வெளியே செல்லும் சௌந்தர்யா, நான் என்ன செய்தாலும் தப்புதான் தப்புதான் சொல்றாங்க என்று கூறுவதுடன் இன்றைய புரமோ வீடியோ முடிவுக்கு வருகிறது. இன்றைய எபிசோடில் இந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#Day15 #Promo2 of #BiggBossTamil
— Vijay Television (@vijaytelevision) October 21, 2024
Bigg Boss Tamil Season 8 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BiggBossTamilSeason8 #VJStheBBhost #VijaySethupathi @mynanduonline #AalumPudhusuAattamumPudhusu #BiggBossTamil #Disneyplushotstartamil #VijayTelevision #VijayTV pic.twitter.com/Csh7lta3DH